சட்டத் திருத்தத்தை தொடர்ந்து எதிர்க்கும் புத்த பிட்சுக்கள்
பெெங்களூர்:
புதிய அரசியல் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள புத்த பிட்சுக்கள் அதை அதிபர் சந்திரிகா உடனேநாடாளுமன்றத்திலிருந்து திரும்பப் பெற வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய அரசியல் சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும். இல்லையேல் அதிபர் பதவியை சந்திரிகாராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மல்வத்தே, அஸ்கிரியா, அமரபுரா, ரமகானா போன்ற புத்த அமைப்புக்கள் மசோதாவை வாபஸ் பெறும்படிசந்திரிகா அரசுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியுள்ளன.
மசோதாவை வாபஸ் பெறாவிட்டால் நாட்டில் பிரிவினை ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர்.
சிங்கள உருமாயக் கட்சியைச் சேர்ந்த ஹடிகாலே விமலசாஹரா, மசோதா வாபஸ் வாங்கப்படும் வரை, சாகும் வரைஉண்ணாவிரதம் இருப்பேன் என்று எச்சரிக்கை விடுத்ததுடன் உண்ணாவிரதப் போராட்டத்தையும் துவக்கியுள்ளார்.
விமலசாகரா இறந்தால் அடுத்தபடியாக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர இன்னொருவர் வருவார்என்றும் தேசிய உருமாயக் கட்சி கூறியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications