ராஜ்குமார் விடுதலையில் நீடிக்கும் இழுபறி
சென்னை:
கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறும் வரை கன்னட நடிகர் ராஜ்குமார் மற்றும் அவரது உறவினர்களைவிடுவிக்க வீரப்பனுடன் உள்ள நக்சலைட்டுகள் விரும்பவில்லை என்று தெரிகிறது.
ராஜ்குமார் கடத்தப்பட்டு 10 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இரு மாநிலங்கள் சார்பில்வீரப்பனைச் சந்திக்கச் சென்றுள்ள அரசுத் தூதர் கோபால் இன்னும் சென்னை திரும்பவில்லை.
ராஜ்குமார் உடனடியாக விடுவிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பெல்லாம் போய் அவரைச் சந்திக்கச் சென்ற அரசுத்தூதர் கோபாலாவது விரைவில் திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வீரப்பன் விதித்த 10 கோரிக்கைகளின் தன்மையை வைத்து வீரப்பனுடன் நக்சலைட்டுகள் இருக்கலாம் என்றுஇருமாநில அரசுகளும் நம்புகின்றன.
இந்நிலையில் வீரப்பனுக்கும், அரசுத் தூதர் கோபாலுக்கும் செவ்வாய்க்கிழமை மற்றொரு சுற்றுப் பேச்சுவார்த்தைதொடங்கியது. வீரப்பனது கோரிக்கைகளுக்கு அரசுத் தரப்பில் கூறப்பட்ட பதில்கள் அனைத்தும் சாதகமாகஇருப்பதாக அரசுத் தூதர் விளக்கினார். இருப்பினும் இக்கோரிக்கைகளை வீரப்பனுடன் இருப்பவர்கள்ஏற்கவில்லை. இதனால் வீரப்பனும் குழப்பமாக இருக்கிறார்.
அரசுத் தரப்பு பதில்கள் ஓரளவாவது திருப்தியளிக்கிறது என்பதை வெளிப்படுத்த பிணைக்கைதிகளை தன்னுடன்அனுப்பி வைக்குமாறு அரசுத் தூதர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்து துணை ராணுவப் படையினர் 11 குழுக்கள்கர்நாடகாவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளன என்று வீரப்பனிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால் வீரப்பன் திடீரென்றுகோபமடைந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் பிணைக் கைதிகளை விடுவிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளதாகவும்தெரிகிறது.
இதுவரை பலமுறை வீரப்பன் ஆள்கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறான். ஆனால் இந்த முறை வீரப்பன்கர்நாடகத்தின் முக்கிய விஐபி யைக் கடத்தியிருக்கிறான். இதனால் மிக எளிதில் ராஜ்குமாரையும், அவரதுஉறவினர்களையும் வீரப்பன் விடுவிப்பானா என்பது சந்தேகமே.












Click it and Unblock the Notifications