நடத்தையில் சந்தேகம் ..மனைவி கொலை.. கணவருக்கு ஆயுள்
Subscribe to Oneindia Tamil
கோவை:
நடத்தையில் சந்தேகப்பட்டு, மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம்தீர்ப்பளித்தது.
திருப்பூர் மூகாம்பிகை நகர் 3 வது வீதியைச் சேர்ந்தவர் ராஜூ (60). இவரது மனைவி ராஜம்மாள் (45). இவர் தனதுமகன் மற்றும் மருமகனுடன் வசித்து வந்தார். ஆனால் இவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டுவந்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்தது.
கடந்த 99ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறின்போது மனைவி ராஜம்மாளைஅரிவாளால் வெட்டினார். பல இடங்களில் வெட்டுப்பட்ட ராஜம்மாள் இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாகபோலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜூவைக் கைது செய்தனர்.
கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், ராஜூவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதிசொக்கலிங்கம் தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications