நேருவை மிஞ்சிய சோனியா ... இளங்கோவன் பெருமிதம்
சென்னை:
கோவையில் நடைபெற்ற காமராஜர் பிறந்த தினவிழாவை சிறப்பாக நடத்திக்காட்டியதன் மூலம் நாட்டிலேயே தமிழகத்தில் இருக்கும் காங்கிரஸ்தான் உண்மையானகாங்கிரஸ் கட்சி என்பதை நிரூபித்து விட்டோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிதலைவர் இளங்கோவன் தெரிவித்தார்.
கோவை மாநாட்டில் கலந்து கொண்ட காங்கிரஸ் தொண்டர்களுக்கு அவர் நன்றிதெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்ட கோவை மாநாட்டில்ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டதன் மூலம் நேரு குடும்பத்தின்தலைமைக்கு என்றென்றும் அளித்து வரும் ஆதரவு தொடரும் என்பதைநிரூபித்திருக்கிறோம்.
கோவைக்கு நேரு வந்தபோது வந்த கூட்டத்தை விட சோனியா காந்தி வந்தபோதுவந்த கூட்டம் அதிகம். அது கூட்டி வந்த கூட்டம் அல்ல. தேடி வந்த கூட்டம் என்பதுதொண்டர்களின் உணர்ச்சி முழக்கம் உணர்த்தியது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் இற்றுப் போய்விட்டது என்றுகூறியவர்களின் வாயை அடைக்க வைத்துவிட்டனர் காங்கிரஸ் தொண்டர்கள். இனிதமிழகத்தில் மக்கள் அலை சோனியா காந்தி பக்கம்தான் என்பதையும் கோவைமாநாடு நிரூபித்துள்ளது.
கோவை மாநாட்டில் கலந்து கொண்ட காங்கிரஸ் பேரியக்கத் தொண்டர்களின்பாரம்பரிய கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்ததை சோனியா காந்திதனது உரையில் குறிப்பிட்டுப் பாராட்டினார்.
அந்த பாராட்டை ஏற்றுக் கொண்டு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பலவெற்றிகளைக் குவித்து தனி முத்திரை பதிக்க தொண்டர்கள் கடுமையாக உழைக்கவேண்டும்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உண்மையான காங்கிரஸ் இருக்கிறது என்றபேருண்மையை கோவை மாநாடு இந்த உலகத்துக்கு உணர்த்தியுள்ளது. அதற்குஅரும்பாடுபட்ட காங்கிரஸ் தொண்டர்களுக்கு நான் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications