அண்ணா சாலையில் 10 நிறுவனம் தொடங்கிய சசிகலா சசி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையின் வர்த்தகப் பகுதியான அண்ணா சாலையில் ஜெயலலிதாவின் நெருங்கியதோழியும், அவரது உறவினர்களும் 10 நிறுவனங்களைத் தொடங்கியுள்ளனர்.

இந்தத் தகவலை ஆடிட்டர் பாலாஜி, முதலாவது சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன்,இளவரசி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இவ்வழக்கு முதலாவது நீதிமன்றத்தில் நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன்முன்னிலையில், விசாரிக்கப்பட்டு வருகிறது. புதன்கிழமை நடந்த விசராணயில்ஆடிட்டர் பாலாஜி அளித்த சாட்சியம்:

நான் 1988-ம் ஆண்டு முதல் ஆடிட்டராகப் பணியாற்றி வருகிறேன். எனதுஅலுவலகம் மந்தைவெளியில் உள்ளது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்குநான் ஆடிட்டராக இருந்துள்ளேன்.

சசிகலா, சுதாகரன், இளவரசி மூன்று பேரும் பங்குதார்களாகச் சேர்ந்து சென்னைஅண்ணாசாலையில், 10 நிறுவனங்களைத் தொடங்கினர். இவை மத்திய சென்னைபதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டன.

1995-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி பதிவு செய்யப்பட்ட இந்த 10நிறுவனங்களுக்கும் 21, வெலிங்டன் பிளாசா, அண்ணாசாலை, சென்னை 2 என்றுமுகவரி கொடுக்கப்பட்டது.

நிறுவனங்களின் பதிவு விண்ணப்பங்களில் சசிகலா, சுதாகரன், இளவரசி மூன்று பேரும்கையெழுத்திட்டுள்ளனர். அந்த கையெழுத்துக்களை அங்கீகரித்து நான் கையெழுத்துபோட்டுள்ளேன்.

லட்சுமி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், கோபால் புரமோட்டர்ஸ், சக்தி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்,நமச்சிவாயா ஹவுசிங் டெவலப்மெண்ட் உள்பட 10 நிறுவனங்களை அவர்கள்தொடங்கினர். இவ்வழக்குத் தொடர்பாக எனது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப்போலீஸார் 1996, அக்டோபர் 18-ம் தேதி சோதனை நடத்தினர் என்றார் ஆடிட்டர்பாலாஜி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+