சஹாரா கப் கிரிக்கெட் ... இந்திய அணித் தேர்வு தள்ளிவைப்பு
மும்பை:
கனடாவில் நடைபெறவுள்ள சஹாரா கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் கலந்துகொள்ளும் இந்திய அணியின் தேர்வு காலவரையின்றித் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பாகிஸ்தானுடனான இப்போட்டித் தொடர் நடைபெறுமா என்பதில்சந்தேகம் எழுந்துள்ளது.
டொரண்டோவில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில்இப்போட்டி நடைபெறும். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில்பாகிஸ்தானும், இந்தியாவும் கலந்து கொள்ளும்.
மேட்ச் பிக்ஸிங் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்துள்ளதால், இந்தியா இப்போட்டித்தொடரில் கலந்து கொள்வது குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டு வந்தது.
இந்திய அணித் தேர்வு வியாழக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.தற்போது இது காலவரையின்றித் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சுக்தேவ் தின்சாவின் வலியுறுத்தலைத் தொடர்ந்து இந்த முடிவைஇந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு கார்கில் பிரச்சினை காரணமாக இப்போட்டித் தொடர் ரத்துசெய்யப்பட்டது. அதற்குப் பதிலாக மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் இந்தியாவும்,பாகிஸ்தானும் தனித் தனித் தொடரில் விளையாடின.
தற்போது அமர்நாத் யாத்ரீகர்கள் 100 பேர் கொல்லப்பட்டதன் பின்னணியில்இப்போட்டித் தொடரில் இந்தியா கலந்து கொள்வது சந்தேகத்துக்குரியதாகி உள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications