சூடானில் குண்டு வீச்சில் 7 தீவிரவாதிகள் பலி

Subscribe to Oneindia Tamil

நைரோபி (சூடான்):

சூடானில் ராணுவ போர் விமானம் மூலம் தீவிரவாதிகள் அதிகமுள்ள பகுதிகளில் வெடிகுண்டு வீசித் தாக்கியதில் 7 பேர் உயிரிழந்தனர். 100 க்கும்மேற்பட்டோர் காயமடைந்தனர். சாவு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

திங்கள்கிழமை பார் எல் காசால் என்ற மாநிலத்தில் உள்ள டோன்ஜ் மற்றும் மாபெல் பகுதிகளில் இத்தாக்குதல் நடந்தது.

இந்தத் தாக்குதலில் உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் எடுத்துச் சென்ற ஐ.நா.வுக்குச் சொந்தமான விமானம் குண்டுவீச்சிலிருந்து மயிரிழையில்தப்பியது. தாக்குதல் சம்பவத்தை சூடான் மக்கள் விடுதலை அமைப்பு என்ற தீவிரவாத இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் சாம்சன் க்வாஜேஉறுதிப்படுத்தியுள்ளார். ஐ.நா மற்றும் அரசு சாரா அமைப்புக்களும் இதை உறுதிப்படுத்தியுள்ளன.

முஸ்லீம் நாடான சூடானின் தெற்குப் பகுதியில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள். இவ ர்கள், தங்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என்றுகோரி கடந்த 17 வருடங்களாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், கிறிஸ்தவர்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்து வரும்சண்டையில் இதுவரை 20 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பார் எல் காசால் என்ற மாநிலத்தில் சுயாட்சி கேட்டுப் போராடும் தீவிரவாதிகள் அதிகம் வசித்து வருகிறார்கள். சூடான் மக்கள் விடுதலைஅமைப்பு என்றழைக்கப்படும் இந்தத் தீவிரவாதிகள் நாட்டின் தெற்குப் பகுதியில், ராணுவ வீரர்களுடன் நடத்திய சண்டையின் இறுதியில், கேரிசன் டவுனில்உள்ள கோக்ரெயின் என்ற பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீவிரவாதிகள் கைப்பற்றிய பகுதிகளை மீட்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த ஒரு வாரமாக விமானம் மூலம் இவர்கள் வாழும் பகுதிகளில்ராணுவ வீரர்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+