தாமதமாக "கண் விழித்த வெடிகுண்டுக்கு 10 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

ஹனோய் (வியட்நாம்):

அமெரிக்காவுடனான போரின்போது வெடிக்காமல் போன கண்ணிவெடி மற்றும்பீரங்கிக் குண்டுகள் வெடித்து வியட்நாமில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

வியட்நாமின் மத்திய பகுதியில் உள்ள பின் டிங் மாகாணத்தில், திங்கள் கிழமையன்றுபிரங்கிக் குண்டு வெடித்து 6 குழந்தைகள் இறந்தனர். நான்கு பேருக்கு காயங்கள்ஏற்பட்டது. இந்தக் குண்டு அப்பகுதியில் இருந்த வயலில் புதைந்து கிடந்தது. அதைஎடுத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அது வெடித்தது.

இதேபோல, பிங் டுவாங் என்ற பகுதியில், ஒரு விவசாயி நிலத்தைத் தோண்டிக்கொண்டிருந்த போது புதைத்து வைக்கப்படிருந்த கண்ணி வெடி வெடித்ததில் நான்குபேர் கொல்லப்பட்டனர்.மூன்று பேருக்கு காயமடைந்தனர்.

1940 முதல் 1975வரை நடந்த வியட்நாம் போரின் போது வியட்நாமின் வயல்களில்புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளில் இன்னும் 30 லட்சத்துக்கும் அதிகமான குண்டுகள்வெடிக்காமல் உள்ளன.

இத்தகைய சம்பவங்கள் காரணமாக ஆண்டுதோறும், 12 பேர் வியட்நாமில்இறக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலனவர்கள் குழந்தைகள் என்பதுகுறிப்பிடத்தக்கது. இதையடுத்து வியட்நாமை, தனது உலகளாவிய மனிதாபிமானதிட்டத்தின் கீழ் ஐ.நா சபை சேர்த்துள்ளது.

வியட்நாமில் இது வரை வெடிக்காமல் இருக்கும் கண்ணி வெடி மற்றும் பீரங்கிக்குண்டுகளை செயலிழக்கச் செய்ய 1.7 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள கருவிகளைவழங்குவதாகவும் ஐ.நா. கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+