மகள்கள் போக்கால் மனம் உடைந்த தம்பதி தற்கொலை
கோவை:
தனது மகள்கள் இருவரும் தாங்களாகவே மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் செய்து கொண்டதால் மனம் உடைந்தபெண், அவர் குடும்பம் நடத்தி வந்த நபருடன் சேர்ந்து ஆசிட் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை அருகே உள்ள பச்சாபாளையத்தைச் சேர்ந்தவர் குப்பு ராஜ் (60). இவரும், ஜமீலா (50), என்ற பெண்ணும்கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
ஜமீலாவிற்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருந்தனர். ஜமீலாவின் கணவன் முகமதுஅலி இறந்த பிறகு, கடந்த 15 ஆண்டுகளாக குப்புராஜ் மற்றும் ஜமீலா ஆகியோர் கணவன் மனைவியாக வாழ்ந்துவந்தனர்.
இந்நிலையில், ஜமீலாவின் இரண்டு பெண்களும் இருவரைத் தேர்வு செய்து திருமணம் செய்து கொண்டனர்.இவர்கள் தங்கள் சொற்படி கேட்கவில்லை என எண்ணிய குப்புராஜூம், ஜமீலாவும் ஆசிட் குடித்தனர்.சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தனர்.












Click it and Unblock the Notifications