ஜெயாவின் சொத்து எல்லாமே ஊழல் சொத்து தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வருமானத்துக்கு மீறிய சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு நிச்சயம் தண்டனைகிடைக்கும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறினார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது முதலாவது சிறப்புநீதிமன்றத்தில் வருமானதுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விசாரிக்கப்பட்டுவருகிறது. இவ் வழக்கில் நீதிமன்றத்தில் சுவாமி வியாழக்கிழமை ஆஜராகி சாட்சியம்அளித்தார்.

அதன் பிறகு நீதிமன்ற வளாகத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

ஜெயலலிதா சொத்து, சசிகலா சொத்து, சசிகலாவின் குடும்பச் சொத்து எல்லாமேஊழலில் சேர்த்த சொத்துக்கள் தான்.

நான் தனி மனிதனாகத்தான் ஜெயலலிதா மீது வழக்குத் தொடர்ந்தேன். ஆதாரம்இல்லாமல் நான் எந்த வழக்கையும நான் தாக்கல் செய்யவில்லை. டான்சி நில பேரஊழல் தொடர்பான வழக்கையும் நான் தான் தாக்கல் செய்தேன்.

நான் தொடர்ந்த வழக்குகள் இதுவரை தள்ளுபடி ஆனதில்லை. இந்த வழக்கிலும்ஜெயலலிதா, சசிகலா உள்பட அனைவருக்கும் நிச்சயம் தண்டனை கிடைக்கும்.தண்டனையியில் இருந்து யாரும் தப்ப முடியாது என்றார் சுவாமி.

முன்னதாக நீதிமன்றத்தில் அவர் அளித்த சாட்சி விவரம்:

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா மீது 1996, ஜூன் 14ம்தேதி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் புகார் மனு கொடுத்தேன்.

முதல்வராக இருந்தவரை மாதம் 1 ரூபாய் தான் ஜெயலலிதா சம்பளம் வாங்கினார்.ஆனால், அவர் தாக்கல் செய்த வருமான வரி கணக்கு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தசொத்து விவரத்தையும் அவருக்கு உண்மையாக இருந்த சொத்து விவரத்தையும்ஒப்பிடும்போது ஏகப்பட்ட முரண்பாடுகள்.

அதனால் தான் அவர் மீது புகார் கொடுத்தேன். ஜெயலலிதா தவிர சசிகலா மற்றும்அவரது உறவினர்களையும் விசாரிக்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறியிருந்தேன்.

அந்த மனு குறித்து எனது பிரமான வாக்குமூலம் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.மனுவில் நான் கூறியிருந்ததுபோல, பல்வேறு சாட்சிகளின் விசாரணை நடத்தஉத்தரவிட்டார்.

அந்த உத்தரவின்பேரில் என்னிடம் லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் நல்லம்மநாயுடு விசாரணை செய்தார்.

இவ்வாறு சுவாமி சாட்சியளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+