வெடி குண்டு கண்டு பிடித்தால் ரூ. 500 பரிசு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது போலீஸாரும், பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருப்பதற்காக போலி வெடிகுண்டுகளை கண்டுபிடித்தால்பொதுமக்களுக்கு ரூ. 500 பரிசு வழங்கும் திட்டத்தை டெல்லி போலீசார் கொண்டு வந்துள்ளனர்.

ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று எந்த வித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுப்பதற்கு புதிய வழிமுறையை டெல்லி போலீசார் கையாளஇருக்கிறார்கள். இது பொதுமக்களின் வி ழிப்புணர்வையும். போலீசாரின் விழிப்புணர்வையும் சோதிக்கும் எண்ணத்துடன் செயல் படுத்தப்படுகிறது.

இதையொட்டி, கடந்த 10 நாட்களாக டெல்லியின் முக்கிய பகுதிகளில் போலி வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. இவற்றை போலீஸார்கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடிக்கத் தவறும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் யாராவது குண்டைக் கண்டுபிடித்தால் அவர்களுக்கு 500 ரூபாய் பரிசு வழங்கப்படும். வெடிகுண்டைக் கண்டுபிடிக்கும் பொதுமக்கள் அந்தவிவரத்தை உடனே காவல் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும்.

பொதுமக்கள் கண்டுபிடிக்கும் குண்டுகளை தொடக்கூடாது. காவல் துறை அதிகாரிகள் போலி குண்டுகள் வைக்கப்பட்ட இடத்திற்கு அருகில் இருப்பார்கள்.இது வேறு யாரும் போலி வெடிகுண்டுக்கு பதிலாக நிஜ குண்டை மாற்றி விடாமல் கண்காணிப்பதற்கான முன்னெச்செரிக்கை நடவடிக்கையாகும் எனரயில்வே கூடுதல் கமிஷனர் அலோக் குமார் தெரிவித்தார்

இந்த நடைமுறை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு குடியரசு தினத்தன்றும் இந்த நடவடிக்கை தொடர்கிறது.

இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரில் நடந்த படுகொலை காரணமாக ரயில்வே ஸ்டேஷன், வெளிமாநிலப் பேருந்துகள் நிற்கும் பேருந்து நிலையங்கள்,கடைவீதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் ரயில்வே நிலையத்திற்கு அருகில்தான் பொதுவாக தங்குவார்கள் என்பதால் போலீசார் ரயில்வே நிலையத்திற்கு அருகே உள்ள ஓட்டல்களில்தீவிர சோதனை நடத்தியும், தீவிர கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்

தீவிரவாதிகளின் நாச வேலையைத் தடுக்க பிரதமர் சுதந்திர தினத்தன்று கொடியேற்ற உள்ள செங்கோட்டையைச் சுற்றி தொடர்ந்து ரோந்து சுற்றிவருகின்றனர் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+