சோ கேள்வி பதில்

Subscribe to Oneindia Tamil

""வீரப்பன் மனிதர்களை கொலை செய்கிறான்; அவனுக்குப் பரிந்து பேசுகிற அரசியல்வாதிகள், சட்டத்தின் மாட்சிமையைக் கொலை செய்கிறார்கள்.பொது மன்னிப்பு என்ன- ஒரு துளி மன்னிப்புக் கூட இருவருமே அருகதை அற்றவர்கள்""! என்கிறார் சோ.

வீரப்பன் அனுப்பிய கோரிக்கைகளை தாங்கள் அனேகமாக ஏற்றுக் கொண்டு விட்டபடியால் - அவர் ராஜ்குமாரை விடுதலை செய்து விடுவார் என்றுநம்புகிறோம் -என்று கர்நாடக, தமிழக முதல்வர்கள் கூறியிருக்கிறார்கள்.

அவர்களுடைய எதிர்பார்ப்பின்படியே, விரைவில் சந்தனப் போராளி வீரப்பர், ராஜ்குமரை விடுதலை செய்துவிடுவார் என்று நம்புகிறோம். அம்மாதிரி அவர்செய்யும் போது, அவருடைய பெருந்தன்மைக்கும், மனிதாபிமானத்திற்கும் அது ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும்.

வீர்ப்பர் அனுப்பி வைத்த கோரிக்கைகளில் மர்மமான ஒன்று இருக்கிறது. தமிழக சிறையில் இருக்கும் ஐவரை விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான்அந்தக் கோரிக்கை.

யார் இந்த ஐவர் என்பது தெரியவில்லை. தமிழக முதல்வர் அந்த விவரத்தை பத்திரிக்கையாளர்களிடம் கூறவில்லை. இதெல்லாம் அரசியல் ரகசியமாகஇருக்கலாம். இரு முதல்வர்களுக்கும்ம், வீரப்பருக்கும் மட்டுமே தெரியக்கூடிய அரசு ரகசியத்தை தெரிந்து கொள்ள நம்மைப் போன்ற சாதாரணமக்களுக்கு உரிமை இல்லை.

விவரம் தெரியாததால், யூகத்தில் இறங்க வேண்டியதுதான். அந்த ஐவர், வீரப்பருக்கு வேண்டியவர்களாகவும் இருக்கலாம்; அல்லது அவரோடுகலந்திருப்பதாகக் கூறப்படுகிற தமிழ்த் தீவிரவாத இயக்கங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கலாம்.

சட்டப்படி தண்டனைக்குரியவர்கள், சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல், மரியாதையுடன் அனுப்பி வைக்கப்பட வேண்டும் - என்ற வீரப்ப கோரிககைஏற்கப்படுவதால் வெளியே வரப்போகிறவர்கள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்று தெரிந்து கொள்ளும் உரிமையும் நமக்குக் கிடையாது. ஆபத்துநேரிடும் போது தெரிந்து கொண்டால் போதாதா?

மேற் சொன்னவை தவிர, வெளியே வந்துள்ள மற்ற வீரப்ப கோரிக்கைகள் அனேகமாக தமிழர் நல கோரிக்கைகளே. அதாவது - காவிரி நீர்,காவிரி சண்டையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நஷ்ட ஈடு போன்ற கோரிக்கைகள்.

இவற்றை கர்நாடக அரசு ஏற்கிறது. ஆக, வீரப்பர், தமிழர் நலனுக்காகத்தான் ராஜ்குமாரை பிடித்து வைத்திருக்கிறார் என்று இப்போது நாம் புரிந்துகொள்ள வேண்டும். சரி, நாம் புரிந்து கொள்கிறோம்; வீரப்பரை பாராட்டுகிறோம்; அவருக்கு தமிழகமே கடன்பட்டிருக்கிறது என்று ஒப்புக்கொள்கிறோம். ஆனால் கர்நாடக மக்களும் புரிந்து கொள்வார்களே! அதற்கு என்ன செய்வது?

கன்னட நடிகர் ராஜ்குமாரை பிடித்து வைத்துக் கொண்டு, ப்ளாக் மெயில் செய்து, தமிழர் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளப் போகிறீர்களா? என்றுகன்னடர்கள் கோபித்துக் கொண்டு, அந்தக் கோபத்தை கர்நாடகத் தமிழர்கள் மீது காண்பித்தால் என்ன செய்வது? அப்படி நடந்தால், வீரப்பகோரிக்கைகள், கர்நாடக தமிழர்களுக்கு தொல்லை தருகிற கோரிக்கைகளாக அல்லவா உருவெடுத்து விடும்?

இது ஒருபுறமிருக்க, காட்டிலிருந்து வந்தது பத்து கோரிக்கைகள்தானா- என்ற சந்தேகம நமக்கிருக்கிறது. வீரப்பர் பணம் கேட்காமலாஇருந்திருப்பார்? எத்தனை கோடிகள் கேட்டிருக்கிறாரோ? அவருக்கு இல்லாத பணக்கஷ்டமா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+