18 கி.மீ. ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த 16 வயது சிறுமி
ஐயோ பாவம், அடுத்த ஆள் கடத்தல் வரை, அவர் காட்டில் எப்படி காலம் தள்ளுவது?ஆயுதம் வாங்க வேண்டாமா?தன்னுடன் இருக்கிற தமிழ் தீவிரவாதிகளை சம்ரட்சணைசெய்ய வேண்டாமா?
தனக்கு தகவல் தருகிறவர்களுக்கு தகுந்த சன்மானங்களை அவர் வழங்க வேண்டாமா?அடுத்த ஆள் கடத்தலை திட்டமிட வேண்டாமா? அதை தமிழக, கர்நாடகஅரசுகள்தானே தர வேண்டும்!
என்ன தொகை கை மாறியது என்று தெரிந்து கொள்ளும் உரிமை நமக்குக் கிடையாது.கை மாறப் போகிற கோடிகள், நம் அப்பன் பாட்டன் வீட்டுப் பணமா? அரசாங்கப்பணம்தானே அது?
அதில் நமக்கென்ன உரிமை? அது அரசியல்வாதிகளின் உரிமை - ஆட்சியாளர்கள்உரிமை. ஆகையால் எத்தனை கோடி என்ற நம்முடைய கேள்விக்கு பதிலைஎதிர்பார்க்க முடியது.
பொது மன்னிப்பு கோரிக்கை வேறு இருக்கவே இருக்கிறது. இது இப்போதும்கேட்கப்பட்டிருக்கும். இது இப்போதும் கேட்கப்பட்டிருக்கும். இப்போதுவெளியிடப்பட்ட பட்டியலில் இது இல்லை என்பதால், இந்தக் கோரிக்கை வீரப்பரால்கைவிடப்பட்டுவிட்டது என்று நம்ப நாம் தயாராக இல்லை.
வெளியே வராத கோரிக்கைகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று நம்பலாம்; அந்தநம்பிக்கை வீண் போகாது. வீரப்பருடைய பொது மன்னிப்புக் கோரிக்கைக்கு ஆதரவுபெருகிற வருகிற நேரமாகிய இத்தருணத்தில், அந்தக் கோரிக்கையை அவர் விடுவாராஎன்ன?
அதோடு, தன்னுடைய கூட்டாளிகளான தமிழ்த் தீவிரவாத இயக்கத்தினருக்கும் வீரப்பர்மன்னிப்பு கோரியிருப்பார் என்றும் எதிர்பார்க்கலாம்.
இந்தப் பொதுமன்னிப்பு கோரிக்கை இன்னமும் வலுப் பெற வீரப்பர் ஒன்றுசெய்யலாம். கிருஷ்ணா தண்ணீர் கொடு என்று கேட்பதற்காக, ஆந்திரப் பிரதேசமுக்கியப் புள்ளி ஒருவரை கடத்தி, சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீரைவரவழைக்கலாம்; வட இந்தியப் பிரமுகர் ஒருவரை கடத்தி வைத்துக் கொண்டுதமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கு என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்குமாறுசெய்யலாம்.
அவ்வளவு ஏன் - பா.ஜ.க. புள்ளி ஒருவரை பிடித்துக் கொண்டு போய் காட்டில்வைத்துக்கொண்டு, தமிழகத்திற்கு மாநில சுயாட்சி என்று கோரி, தி.மு.க. வின் நீண்டநாள் கனவை நனவாக்கி விடலாம்.
எல்லாம் தமிழர் நல கோரிக்கைகள்! பிறகு கேட்பானேன்! பொது மன்னிப்புத்தான்!தியாகிதான்! போராளிதான்! மனிதாபிமானம்தான்!
இப்படி ஒரு கூத்து நடக்கிறதே - என்கிற கூச்ச உணர்வு நமது ஆட்சியாளர்களுக்குக்கொஞ்சம் கூட இல்லை. ஒரு கொலைகாரனிடம் இப்படியெல்லாம் மன்றாட வேண்டியநிலை ஏற்பட்டுவிட்டதே என்ற கவலை துளியும் காணோம். இப்போது ராஜ்குமாரைமீட்டாக வேண்டும்; பணிய வேண்டியதுதான்; ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயம்.
ஆனால் இந்த நிலை ஏன் வந்தது? இந்த மாதிரி ஒரு பேர்வழியை இவ்வளவு நாள்விட்டு வைத்திருப்பது ஏன்?
இரு மாநில போலீசார் எடுத்த நடவடிக்கைகளின் விவரம் என்ன? அது பயன் தராமற்போனது ஏன்?
ராஜ்குமாரை மீட்ட பிறகாவது வீரப்பனுக்கு எதிரான நடவடிக்கைகள் மும்முரம்அடையுமா? அல்லது பேரம்தானா? சமூக விரோதிகளை, கொலைகாரர்களை,தீவிரவாதிகளை, நாச வேலைக்காரர்களை - பேரம் பேசியே வளர்த்து விடுகிறஉரிமையை இந்த ஆட்சியாளர்களுக்கெல்லாம் யார் கொடுக்கிறார்கள்?
வீரப்பன் மனிதர்களை கொலை செய்கிறான்; அவனுக்குப் பரிந்து பேசுகிறஅரசியல்வாதிகள், சட்டத்தின் மாட்சிமையைக் கொலை செய்கிறார்கள். பொதுமன்னிப்பு என்ன- ஒரு துளி மன்னிப்புக் கூட இருவருமே அருகதை அற்றவர்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications