யார் பிடியில் இருக்கிறார் ராஜ்குமார்?
சந்தனக்கடத்தல் வீரப்பனின் கடத்தல் விவகாரம் நேற்றுடன் 12-வது நாளை எட்டியுள்ளது.ஆனால், இன்னமும் இந்த நாடகம் முடிவுக்கு வந்தபாடில்லை.
நாடகமாகத் தொடங்கிய இந்த விவகாரம் அடுத்து என்ன நடக்குமோ என்றகேள்விகளுடன் திகில் பட ஸ்டைலில் சென்று கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில் இந்த கடத்தல் நாடகத்தின் இயக்குநர் வீரப்பன்தானா? அல்லது வேறுயாராவதா? என்பதும் இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது.
இந்த நாடகத்தை ஒட்டு மொத்த இந்தியாவும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. முடிவுசுபமாக இருந்தால் எந்த விதமான பிரச்சனையும் இல்லை. வேறு மாதிரியாகஇருந்துவிட்டால் என்று நினைத்துப் பார்க்வே முடியவில்லை.
காவிரிக் கலவரத்தின் வடு கர்நாடக தமிழர்களுக்கு இன்னும் ஆறவில்லை. இந் நிலையில்அரசுகளைவிட மிகக் கவலையில் இருப்பது கர்நாடகத் தமிழர்கள் தான்.
முதல்வர் கருணாநிதியும் சற்று கவலையோடு இந்தபிரச்சனையை பார்த்துக்கொண்டிருக்கிறார். தேர்தல் நேரம் வேறு. இதை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்கிறஒரு வித சோர்வான நிலைக்கு வந்திருக்கிறது ஆளும் கட்சி.
ஆரம்பத்தில் இரண்டு, மூன்று நாட்கல் மத்திய அரசும், தமிழகம், கர்நாடக அரசுகள் இதைகவனித்துக் கொள்ளும் என்று நினைத்தது. 12 நாட்களாகியும் பிரச்சனை முடிவுக்குவராததில் மத்திய அரசும் தமிழக அரசிடம் தொடர்ந்து விளக்கங்களை கேட்டுக்கொண்டுவருகிறது.
அதே நேரத்தில் ராஜ்குமார் பேசியுள்ள கேசட்டில், தான் மகிழச்சியாகவும், நலமாகவும்இருப்பதாகவும் விரைவில் விடுதலை ஆகி வெளியே வருவேன் என்றும் கூறியுள்ளதுசற்று மகிழ்ச்சியான விஷயம்தான்.
இருந்தாலும், நாடகத்தின் திரைக்கதையில் எங்கோ ஒரு முடிச்சு விழுந்துள்ளது. அது என்னஎன்றுதான் தெரியவில்லை. அதை அவிழ்க்கும் முயற்சியில்தான் தமிழக,கர்நாடக அரசுகள்ஈடுபட்டு வருகின்றன.
வீரப்பனின் கோரிக்கையை ஏற்று அவரைச் சந்திக்க அரசு தூதராக நக்கீரன் கோபால்காட்டுக்குள் சென்றும் 6 நாட்களாகிவிட்டது. ஆனால். இதுவரை வீரப்பனை கோபால்சந்திக்கவேயில்லை என்பதை தமிழக அரசு அதிர்ச்சி கலந்த கவலையில் கவனித்துக்கொண்டிருக்கிறது.
ஏற்கனவே பல முறை அரசு முறையிலும், தனிப்பட்ட முறையிலும் வீர்ப்பனை சந்தித்தவர்நக்கீரன் கோபால். வீரப்பனுடன் பேச்சு நடத்தி அவரால் கடத்தப்பட்டவர்களை மீட்டுக்கொண்டு வந்தவர்.
ஆனால், இந்த முறை ராஜ்குமாரை மீட்டு வர காட்டுக்குள் சென்றுள்ள கோபால் இதுவரைவீரப்பனைச் சந்திக்கவில்லை. வீரப்பனை கோபால் சந்திக்க முடியவில்லையா? அல்லதுகோபாலைச் சந்திக்க வீரப்பன் விரும்பவில்லையா? என்று தெரியவில்லை.
கோபாலால் ராஜ்குமாரையும் கடத்திச் செல்லப்பட்டவர்களையும் மட்டுமே சந்திக்கமுடிந்திருக்கிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் வீரப்பன் மட்டும்லலஅவனது கூட்டாளிகள் கூட இல்லை.
இன்னும் வீரப்பனைச் சந்திக்கவில்லை. அடுத்து இரண்டு அல்லது மூன்று நாட்களில்வீரப்பனைச் சந்திப்பேன். வீரப்பனது கோரிக்கைகளுக்கு தமிழக, கர்நாடக அரசுகள்தெரிவித்த பதில்களை அவரிடம் தெரிவித்துவிட்டு அதற்கு வீரப்பன் தெரிவிக்கும்பதில்களை எடுத்துக் கொண்டு விரைவில் சென்னை வருகிறேன் என்று கோபால்தெரிவித்துள்ளார்.
ராஜ்குமாரையும் மற்றவர்களையயும் கடத்தியபோது, வீரப்பன் கொடுத்துவிட்டுச்சென்றதாகக் கூறப்படும் கேசட்டில் தன்னைச் சந்திக்க 8 நாட்களுக்குள் ஒரு தூதரை அனுப்பவேண்டும் என்று வீரப்பன் கூறியிருந்தார்.
அதன்படிதான் அரசு தூதராக நக்கீரன் கோபால் அனுப்பப்பட்டார். ஆனால், அவரைஇன்னும் வீரப்பன் சந்திக்கவில்லை என்பது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது.
தான் தெரிவித்த 8 நாள் கெடு முடிந்த பிறகுதான் கோபாலை வீரப்பன் சந்திக்கதிட்டமிட்டுள்ளாரோ என்றும் சந்தேகத்தோடு விவாதித்துக் கொணடிருக்கிறார்கள் தமிழகஅதிகாரிகள்.
தற்போது அனுப்பியுள்ள கேசட்டில் வீரப்பனோடும், அவரது சகாக்களோடும் பழகியதுரொம்ப ஆனந்தமா இருக்கு என்று ராஜ்குமார் பேசியுள்ளார். ஆனால், மேற்கொண்டு எந்ததகவலும்அதில் இல்லை.
ராஜ்குமாரை கோபால் சந்தித்த இடத்தில் வீரப்பன் இல்லை என்றும் அவர் காட்டுக்குள் வேறு எங்கோ இருக்கிறார்என்றும் சந்தேகிக்கக் தோன்றுகிறது.
கடத்தப்பட்டவர்களும் கோபாலும் மட்டுமே உள்ள அந்த புகைப்படங்களில் வேறு எவருமே இல்லாதததுவழக்கத்திற்கு மாறானது. வீரப்பன் கூட அங்கே இல்லை என்பதும், கோபாலை வீரப்பன் சந்திக்கவில்லை என்பதும்,பிரச்சனை வேறு ஏதாவது ஒரு விபரீதமான பின்னணியுடன் இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது என்றார்அந்த காவல்துறை உயர் அதிகாரி.
முன்னதாக நடந்த கடத்தல் சம்பவங்களில் ஆட்களைக் கடத்திய பிறகு வீரப்பன் அடுத்து அனுப்பும் தகவல், நான்கோபாலுடன் பேச வேணடும். அவரை காட்டுக்குள் அனுப்புங்கள் என்பது தான். அப்படித்தான் இதுவரை நடந்தது.கோபாலும் காட்டுக்குள் சென்று வீரப்பனைச் சந்தித்தார்.
தமிழ்த் தீவிரவாதிகளின் பிடியில் வீரப்பன் சிக்கியிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அந்தத்தீவிரவாதிகள் சொலிகிறபடிதான் வீரப்பன் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அந்தத் தீவிரவாதிகளின் கெடுபிடியால் தான் வீரப்பன் கோபாலை சந்திக்க முடியவில்லை. மேலும் வீரப்பன்பெயரில் அந்தத் தீவிரவாதிகள் தான் ராஜ்குமாரைக் கடத்தியிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
அப்படி ராஜ்குமாரை தமிழத் தீவிரவாதிகள் கடத்தியிருக்கும் பட்சத்தில் அரசுத் தூதுவராக வந்துள்ள கோபாலிடம்அவர்கள் பேசியிருக்கலாம். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை.
கேஸட்டில் கோபாலின் பேச்சிலோ, ராஜ்குமாரின் பேச்சிலோ தமிழத் தீவிரவாதிளைப் பற்றி எந்தத் தகவலும்இல்லை. எது பற்றியும் ஒரு சரியான முடிவுக்கு வர முடியாது நிலையில் ராஜ்குமார் விடுதலை மேலும் தாமதமாகும்என்றே தோன்றுகிறது.
அவரை மீட்கும் முயற்சியில் தமிழக, கர்நாடக அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.












Click it and Unblock the Notifications