திருப்பூரில் ரெமேட் ஆடை ஏற்றுமதி கருத்தரங்கு
கோவை:
திருப்பூரில் ஐரோப்பிய நாடுகளுக்கு ரெடிமேட் ஆடைகளை ஏற்றுமதி செய்யத் தேவையான நவீனத்தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கு நடக்கவுள்ளது.
இதனைத் துவக்கி வைக்க நெதர்லாந்து நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள்மார்ஷல், டெஸ்மேட் மற்றும் ஜோகன் எஃப் லான்மர் ஆகியோர் வந்துள்ளனர்.
திருப்பூரில் இவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: ஐரோப்பிய நாடுகளுக்கு, ரெடிமேட் ஆடைகளின் ஏற்றுமதிவாய்ப்பு அதிகரித்து வருகிறது. இதனை தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ள, நவீன தொழில்நுட்பங்களைஆடை ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்திய பின்னலாடை ஏற்றுமதி ஐரோப்பிய நாடுகளில் பின்தங்கிய அளவிலேயே உள்ளது. இங்கே இருக்கும்ஏற்றுமதியாளர்கள் வெறும் உற்பத்தியாளர்களாக மட்டுமே உள்ளனர். தொழிலாளர்கள் பனியன் துணிகளைவெட்டி ஒட்டுபவர்கள் மட்டுமே.
புதிய டிசைன்களை உருவாக்கும் கற்பனை வளம் அவர்களிடம் இல்லை. எனவே, இந்தியா ஏற்றுமதியில் இனிவரும் காலங்களில் கடும் போட்டியைச் சந்திக்க வேண்டியிருக்கும். பங்ளாதேஷ், வியட்நாம், இந்தோனேஷியாபோன்ற நாடுகள் இந்தியாவிற்கு சவாலாக அமையும்.
அடுத்த 2004ம் ஆண்டில், வர்த்தகம் தாரளமயமாக்கப்படும் போது மேலும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே, இந்த சவால்களைச் சமாளிக்க தேவையான நடவடிக்கைகளில்அதிரடியாக இறங்க வேண்டும் என்றனர்.












Click it and Unblock the Notifications