For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்... 4-வது கேஸட்டில் ராஜ்குமார் பேச்சு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நான் மகிச்சியாக இருக்கிறேன் என்று நக்கீரன் கோபால் மூலம் தமிழக, கர்நாடகமுதல்வர்களுக்கு அனுப்பியுள்ள கேசட்டில் கன்னட நடிகர் ராஜ்குமார் கூறியுள்ளார்.

வீரப்பன் பிடியில் உள்ள ராஜ்குமாரை மீட்பது தொடர்பாக நக்கீரன் கோபால்காட்டுக்குள் சென்றுள்ளார். தற்போது வீரப்பனைச் சந்தித்துள்ள கோபால், அவர்விதித்துள்ள நிபந்தனைகளுக்கான பதிலைப் பெற்று வரக் காத்துள்ளார்.

அதற்கிடையே, ராஜ்குமார் பேச்சு அடங்கிய கேசட் ஒன்றை தனது உதவியாளர் மூலம்சென்னைக்கு அனுப்பியுள்ளார். புதன்கிழமை நள்ளிரவு சென்னைக்கு வந்த அந்தகேசட்டில், ராஜ்குமார் மற்றும் கோபால் ஆகியோருடைய பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜுக்கு வந்துள்ள இந்தக் கேசட்டில்கோபால் பேசியுள்ளதாவது:

தம்பி, நான் கோபால் பேசறேன்,

ஆறு நாட்கள் பகீரத முயற்சி எடுத்த பிறகு இப்பத்தான் வந்து ராஜ்குமார்மறைவிடத்தை நாங்க கண்டுபிடிச்சிருக்கோம். இப்போ இங்கே தங்கி அவருடன்பேசிட்டு இருக்கோம். முதல்ல எனக்கு பெரிய மகிழ்ச்சி என்னன்னா, அவங்களசந்திப்போமாங்கற பெரிய சந்தேகம் இருந்தது.

இப்ப வந்து அது நிவர்த்தியாகி இப்ப அவங்ககிட்ட நேரிலே பேசிட்டு இருக்கேன்.இந்தத் தகவலை அப்படியே சி.எம்.கிட்ட பேசறேன். நீங்க சி.எம்.கிட்ட இந்தத்தகவலை சொல்லிடுங்க.

(தொடர்கிறார் கோபால்) வணக்கம். நான் நக்கீரன் கோபால் பேசறேன். தமிழக,கர்நாடக முதல்வர்களுக்கு நக்கீரன் கோபால் பேசுறது என்னான்னா, இப்ப நான் வந்துஆறு நாட்கள், அதாவது ஒரு பகீரத முயற்சி எடுத்து, அதாவது பல இடங்களில் சுத்தித்திரிஞ்சி இப்ப நான் வந்து டாக்டர் ராஜ்குமார் அவங்க கடத்தி வைக்கப்பட்டுள்ளஇடத்தை இப்பத்தான் கண்டுபிடிச்சோம்.

நான் என்னுடைய தம்பிகள் சிவசுப்ரமணியம், சுப்பு மூன்று பேரும் இங்கதான்இருக்கிறோம். உண்மையிலேயே அவங்க ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. ரொம்பமகிழ்ச்சியா இருக்காங்க - எங்களப் பார்த்ததுல.

இப்ப உங்ககிட்ட டாக்டர் ராஜ்குமார் பேசறாங்க.

(ராஜ்குமார் தமிழில் பேசுகிறார்) நமஸ்காரம். நான் ராஜ்குமார் பேசறேன். பொதுவாஎனக்கு தமிழ்ல பேசி பழக்கமில்ல. ஆனாலும் இப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டதாலபேசறேன். நம் நக்கீரன் ஆசிரியர் என்னிடம் பேசினாரு. ரொம்ப சந்தோஷம். பத்துநாளாச்சு. இங்க வந்து வீரப்பனோடும், அவரோட சக ஜனங்களோடும் பழகியதுரொம்ப ஆனந்தமா இருக்கு. சந்தோஷமா இருக்கு. இத்தன நாளும் போனதே எனக்குத்தெரியல.

(இதுவரை தமிழில் பேசிய டாக்டர் ராஜ்குமார் இனி கன்னடத்தில் பேசுகிறார்.அதன் மொழி பெயர்ப்பு) கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா என்னைப் பற்றிபெருமையாக பேசி அன்பு காட்டும் மனிதர் அவர். ராஜ்குமார் கர்நாடகத்தின் சொத்துஎன கூறியிருக்கிறார்.

இப்போது நாங்கள் காட்டில் இருப்பதால் எந்த விஷயத்தையும் விவரமாக கூறஇயலவில்லை. நக்கீரன் ஆசிரியர் வந்த பிறகு என்னுடைய குடும்பத்தினர்,குழந்தைகள், மனைவி, ரசிகர்கள், உறவினர்கள் எல்லோரும் மானசீக கவலையோடுபிரச்சினைகளைஅனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆகவேஅவர்களுக்கெல்லாம் சரியானபடி ஆறுதல் கூறவேண்டும் என்று நக்கீரன் ஆசிரியர்என்னிடம் சொன்னார்.

நக்கீரன் கோபால் நமக்கு வேண்டியவர். நான் நம் நக்கீரன் கோபாலைதொலைக்காட்சியில் வீரப்பன் பேட்டியில்தான் பார்த்தேன். இவரைப் பற்றிகேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போதுதான் நேரடியாக முதல் முறையாகபார்த்துப் பேசிக் கொண்டிருக்கிறேன். கோபால் என் நலம் குறித்து விசாரித்தார்.

இங்கே அழகான சூழலில் ஆனந்தமாக இருக்கிறேன். யாரும் எனக்கு எந்தத்தொந்தரவும் கொடுக்கவில்லை. சாப்பாடு, கவனிப்பு, தூக்கம், வீடு அத்தனையையும்மறந்து பூமியின் நடுவில் இந்த வனச் சூழ்நிலையில், ஆனந்தமாக சந்தோஷமாகஇருக்கிறோம். ஆனாலும் எனது அன்பானவர்களைக் காண தாகமாக இருக்கிறேன்.

கூடிய விரைவில் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களும், கர்நாடக முதல்வர்எஸ்.எம்.கிருஷ்ணா அவர்களும் வீரப்பனின் நிபந்தனைகளை நல்லபடியாக கவனித்து,நிவர்த்தி செய்து கொடுத்தால், அதுதான் நான் பெறும் பாக்கியமாகும்.

நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். நன்றாக இருக்கிறேன். எப்போது எனக்குவிடுதலை கிடைக்கிறதோ அந்த நாளில் உங்களையெல்லாம் சந்தோஷமாகசந்திப்பேன். நமஸ்காரம்.

(கோபால் தொடர்கிறார்) இதுவரைக்கும் வந்து டாக்டர் ராஜ்குமார் பேசினாங்க.உண்மையில் வந்து என்னன்னா இன்னிக்கு நாங்க பெரிய முயற்சி எடுத்து சந்திக்கவேண்டியதாகி விட்டது. நான் வந்து இப்ப அடுத்ததா வீரப்பன் கிட்ட- அவர் கொடுத்தகோரிக்கைக்கு நீங்க கொடுத்த பதிலைக் கொடுத்து அதற்கான பதிலை வாங்கிக்கிட்டு,நிச்சயமா நாளை அல்லது நாளை மறுநாள் நேராக வந்து உங்களச் சந்திக்கிறேன்.

நன்றி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X