ஹிஸ்புல் சண்டை நிறுத்தம் வாபஸ்: அதிர்ச்சியில் காஷ்மீர்
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதின் சண்டை நிறுத்தத்தை வாபஸ் பெற்றதையடுத்து எந்த நிமிடத்திலும்ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் சண்டை மூளும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பயத்திலும், அதிர்ச்சியிலும்உள்ளனர்.
ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பு தலைவர் சையத் சலாவுதீன் கடந்த ஜூலை 24 ம் தேதி சண்டை நிறுத்தத்தை அறிவித்தார். அதையடுத்து இந்தியாவுடன் அமைதிப்பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆனால், பாகிஸ்தானையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். காஷ்மீர் பிரச்சனையில் எந்த வித நிபந்தனையுமின்றி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்என்ற கேட்டுக்கொண்டது ஹிஸ்புல். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று மத்திய அரசு கூறியதையடுத்து சண்டை நிறுத்தத்தை வாபஸ்பெறுவதாகக் கூறினார் சையத் சலாவுதீன்.
இந்தத் தீவிரவாத அமைப்பால் தாக்குதல் ஏற்படலாம் என்பதால், ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வன்முறைச் சம்பவங்கள்ஏற்படாதவாறு ராணுவ வீரர்கள், புறக்காவல் படையினர், எல்லைப் பாதுகாப்புப் படையினர் காவல் காத்து வருகின்றனர். நகரில் வாழும் 10லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் எந்த வித ஆபத்துமின்றி வாழும் வகையில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் வாழும் சொகையில் என்பவர் கூறுகையில், மத்தியஅரசும், தீவிரவாத அமைப்பும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தவறிவிட்டனர்என்று கூறினார்.
பல்கலைக்கழக மாணவர் ஹர்ஷத் மாலிக் என்பவர், இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடையும் என்பது ஏற்கனவே எதிர்பார்த்ததுதான் என்றார்.
கம்ப்யூட்டர் இன்ஜினியர் அப்துல் முகமது, கூறுகையில், ஜம்மு காஷ்மீர் எப்போதும் பதட்டம் நிலவும் மாநிலமாகும். இங்கு அடிக்கடி தாக்குதல்ஏற்படுவதால் பெரிய அளிவில் உயிர்ச்சேதம் ஏற்படுகிறது. இங்கு எப்போதும் வன்முறை ஏற்படுவதால் இங்கு வாழும் மக்கள் டெல்லி, பெங்களூர்பகுதிகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
எனது உறவினர் ஒருவர் முதலில் முதலில் ஜமீத் ஈ இஸ்லாமி அமைப்பின் தீவிர தொண்டனாக இருந்தார். பின்னர் அங்கிருந்து விலகி ஹிஸ்புல் முஜாஹிதினில் சேர்ந்தார்.அந்த அமைப்பில் இருந்த போது ராணுவ வீரரால் சுட்டுக் கொல்லப்பட்டார். காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காணவும், பதட்டத்தைத் தணிக்கவும் அரசுநடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார்.
தீவிரவாதிகள் அதிகமுள்ள பட்மலு பகுதியில் முகாமிட்டுள்ள உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஹிஸ்புல் முஜாஹிதின் தீவிரவாத அமைப்பு சண்டைநிறுத்தத்தை வாபஸ் பெற்றதையடுத்து அவர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தத் தொடங்குவார்கள். அதனால் எல்லா பகுதிகளிலும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
ராணுவ வீரர்கள், தீவிரவாதிகளை நோக்கி தாக்குதல் நடத்துவார்கள். ஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்திர தினம் என்பதால் தீவிரவாதிகள் பல இடங்களில்தாக்குதல் நடத்துவார்கள் என்று தெரிகிறது. இதனால் அவர்களால் வன்முறைச் சம்பவம் எதுவும் ஏற்படாதவாறு பாதுகாப்புக்கள்பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications