ரூ. 7000 பணத்திற்காக இளைஞனை எரித்துக் கொன்றவர்கள்
டெல்லி:
ரூ. 7000 பணத்தை திருடியதாக சந்தேகப்பட்ட தொழிற்சாலை உரிமையாளர்கள், தங்களது நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளைஞனைக் கழுத்தை நெரித்துக்கொலை செய்து, பிணத்தை எரித்தனர்.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர் ராமன் பைக்ரா. இவரது உறவினர் சோனு. இவர்கள் இருவரும் பழைய டெல்லியிலுள்ள சாந்தினி சோக் பகுதியில்சாயத்தொழிற்சாலை ஒன்று நடத்தி வந்தனர்.
இந்தத் தொழிற்சாலையில் கடந்த 6 மாதமாக வேலை செய்து வந்தவர் நசீர். இவர் பிகாரைச் சேர்ந்தவர். புதன்கிழமை, ராமன் தொழிற்சாலையில்வைத்திருந்த தனது பீரோவைத் திறந்து பார்த்தார். அப்போது அங்கு வைத்திருந்த ரூ 7000 பணத்தைக் காணவில்லை.
இதையடுத்து, தொழிற்சாலையில் வேலை செய்யும் யாராவது ஒருவர்தான் இந்தப் பணத்தை திருடியிருக்க வேண்டும் என்று சந்தேகப்பட்டார். அங்கு வேலைசெய்யும் ஊழியர்கள் அனைவரையும் அழைத்துக் கேட்டார். அப்போது அங்கு வந்த நசீர் மேல், உரிமையாளர் ராமனுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
பணத்தை நசீர்தான் திருடியிருக்க வேண்டும் என்று சந்தேகப்பட்டார். அதன்படி நசீரை அடித்துத் துன்புறுத்தினார் ராமன். பின்னர் நசீரை கழுத்தை நெரித்துக் கொலைசெய்தார். அவரது சடலத்தை இன்னொரு அறைக்குள் போட்டு தீ வைத்து எரித்தார். இதற்கு சோனுவும் உடந்தையாக இருந்தார் என்று கூறப்படுகிறது.பின்னர் சோனுவும், ராமனும் தலைமறைவாகிவிட்டனர்.
தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த பிற ஊழியர்கள் பக்கத்து அறையிலிருந்து புகை வருவதைப் பார்த்தனர். அவர்கள் அங்கு சென்று பார்த்த போது,நசீர் இறந்து கிடப்பதைக் கண்டனர். தங்களுக்கு ஏதாவது ஆபத்து வருமோ என்று பயந்த அவர்கள் எதுவும் தெரியாதது போல் இருந்து விட்டனர்.
இச்சம்பவம் குறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் ஜம்மு காஷ்மீருக்குத்தான் தப்பிச் சென்றிருக்க வேண்டும் என்று கருதிதனிப்போலீஸ் படை ஒன்று ஜம்மு காஷ்மீர் விரைந்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!