வீரப்பனின் மனைவி எங்கே? கடத்தலுக்கு பயந்து ஓட்டம்

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்:

மேட்டூரில் தங்கியிருந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி அங்கிருந்து வெளியேறிவிட்டதாகக்கூறப்படுகிறது.

கன்னட நடிகர் ராஜ்குமாரையும் 3 பேரையும் வீரப்பன் கும்பல் கடத்திச் சென்றுள்ளது. அவர்களை மீட்க பெரும்முயற்சி நடக்கிறது.

இந்த சம்பவத்தை அடுத்து மேட்டூரில் தனியே தங்கியிருந்த வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியைத் தேடிபத்திரிக்கையாளர்கள் வரத் தொடங்கினர்.

இதனால் தனிமையில் வசித்து வந்த முத்துலட்சுமியின் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் கணவர்கடத்திச் சென்றுள்ள ராஜ்குமாரின் ரசிகர்களால் தனக்கு ஆபத்து ஏற்படும் எனவும் அவர் அஞ்சினார்.

பழிக்குப் பழி ாங்க தன்னை அவர்கள் கடத்திச் சென்று விடுவார்களோ என் பயத்தில் அவர் இருந்தார்.

இந் நிலையில் முத்துலட்சுமியின் வீடும் கடையும் மூடப்பட்டுள்ளது. அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.உறவினர் வீட்டுக்கு சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மகளை அவர் உடன் அழைத்துச் செல்லவில்லை.

மேட்டூரில் உள்ள பள்ளியில் தங்கிப் படித்து வரும் வீரப்பனின் மகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரைபார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+