நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமைக்குள் கலைக்கப்படலாம்?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

எந்த நேரமும் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற சூழ்நிலையில், அரசியல் சட்டத் திருத்த மசோதாவின் எதிர்காலம் குறித்து விவாதிக்க தனதுஅமைச்சர்களின் சிறப்புக் கூட்டத்தை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூட்டியுள்ளார்.

இக்கூட்டத்தில், அரசியல் சட்டத் திருத்த மசோதாவை எப்போது ஓட்டெடுப்புக்கு விடுவது என்பது குறித்து முடிவு ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.ஆகஸ்ட் 24-ம் தேதி நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் முடிவடைகிறது. அதற்குள் சில திருத்தங்களுடன் மசோதாவை ஓட்டெடுப்புக்கு விட சந்திரிகா முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.

மசோதாவில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, சில தமிழ்க் கட்சிகள் ஆகியை கூறியுள்ள திருத்தங்கள்குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், இந்த வாரத்திற்குள் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற செய்தியை சந்திரிகா அமைச்சரவையின் மூத்த அமைச்சர் ஒருவர்மறத்துள்ளார். ஆனால் அரசியல் சட்டத் திருத்த மசோதாவை தொடர்ந்து வலியுறுத்த வேண்டாம் என்று சந்திரிகா முடிவு செய்து விட்டால்,வெள்ளிக்கிழமையே நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

முன்னதாக அரசியல் சட்டத் திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை நடப்பதாக இருந்தது. ஆனால் அதை காலவரையின்றிஒத்திவைப்பதாக திடீரென அரசு அறிவித்தது.

ஆகஸ்ட் 3-ம் தேதி, தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்க வகை செய்யும் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.அப்போது முதல் புத்த மத சாமியார்கள், சிங்கள அமைப்புகள், முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவந்தன. நாட்டை இது பிளவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+