அருப்புக்கோட்டை மாணவி கற்பழித்து கொலை: 3 பேருக்கு ஆயுள் தண்டைன
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பள்ளி மாணவியை கற்பழித்த 3 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் ஆயுள்தண்டையாக மாற்றி தீர்ப்பு வழங்கியது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்ற மாணவி கற்பழிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார். இந்த சம்பவம் 1998ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடந்தது.
இந்த மாணவியை கொலை செய்த வீரபத்ரய்ையா, இளங்கோ, ரஹ்மத்துல்லா ஆகிய மூவரையும் போலீசார் கைதுசெய்தனர். இவர்களுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட செசன்ஸ் நீதிபதி முனியாண்டி மரண தண்டனை விதித்துதீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து மூவரும் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் இவர்களின் மரணதண்டனையை ரத்து செய்தது. இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.












Click it and Unblock the Notifications