6 லட்சத்திற்காக மேலாளரைக் கொன்ற டிரைவர் கைது

Subscribe to Oneindia Tamil

கோவை:
கோவையில் இருந்து காரில் ரூ 6 லட்சம் பணத்துடன் கடத்தப்பட்ட தனியார் நிறுவனமேலாளர் கொலை செய்யப்பட்டார். இவரைக் கொலை செய்தது தொடர்பாக கார்டிரைவரைப் போலீசார் கைது செய்தனர்.

கோவை டாடாபாத்தில் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தநிறுவனத்தின் மேலாளர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் டிரைவர் லோகநாதன் ஆகியோர்ரூ. 5.75 லட்சத்தை ரங்கே கவுடர் வீதியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு காரில்எடுத்துச் சென்றனர்.

ஆனால் இந்த காருடன் பணம் மற்றும் மேலாளரை டிரைவர் லோகநாதன் கடத்திச்சென்றது விரசாரணையில் தெரிய வந்தது. லோகநாதனுக்கு துணையாக அவரது தம்பிசிவக்குமார் (26) கோவையிலிருந்து காரில் சென்றுள்ளார். பின்னர் காரில் செல்லும்போது, டிரைவர் லோகநாதன் மற்றும் சிவகுமார் சேர்ந்து முத்துக் கிருஷ்ணனைக்கொலை செய்துள்ளனர். பின்னர் பிணத்தை சத்தியமங்கலம் அருகே கீழே தள்ளிவிட்டுச் சென்றனர்.

லோகநாதன் காரை எடுத்துச் சென்று ஓரிடத்தில் நிறுத்தி விட்டு சொந்த ஊரானசத்தியமங்கலம் அருகே உள்ள ஊத்தாண்டி புதூருக்குச் சென்று விட்டார்.

காரில் சென்றவர்கள் பணத்துடன் மாயமானது குறித்து நிறுவன மேலாளர் ரமேஷ்,காட்டூர் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரையடுத்து, போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் கார் டிரைவர் லோகநாதன்,மேலாளரைக் கொலை செய்து விட்டு பணத்தை எடுத்துச் சென்றது தெரிய வந்தது.எனவே, கார் டிரைவர் லோகநாதனைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இவரிடமிருந்து 83 ஆயிரம் ரூபாயைக் கைப்பற்றினர். மீதமமுள்ள பணத்துடன்தலைமறைவான லோகநாதனின் தம்பியைப் போலீசார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+