வீரப்பனிடமிருந்து 2 நாட்களில் பதில் வரும்.... காத்திருக்கிறது கர்நாடகம்
பெங்களூர்:
வீரப்பனின் கோரிக்கைகளுக்கு அரசு அனுப்பியுள்ள பதிலுக்கு அவரிடமிருந்து 2தினங்களில் திட்டவட்டமான பதில் வரும் என எதிர்பார்ப்பதாக முதல்வர் கிருஷ்ணாகூறினார்.
அவர் கூறுகையில், வீரப்பனிடமிருந்து கோபால் மூலம் வந்த கேஸட்டைக் கேட்டுப்பார்த்தோம்.
வீரப்பனிடமிருந்து ராஜ்குமாரை மீட்க கர்நாடகம் அனைத்து வகையானமுயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளதாக கூறிய கிருஷ்ணா, ராஜ்குமார் நலமுடன் இருப்பதாகவந்துள்ள தகவல்களும் புகைப்படங்களும் மகிழ்ச்சி அளிக்கின்றன என்றார்.
பெங்களூர், மைசூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு 14ம் தேதி வரை விடுமுறைநீட்டிக்கப்பட்டுள்ளது எனவும் கிருஷ்ணா கூறினார்.
வீரப்பனால் நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டதையடுத்து பெங்களூரில் கலவரம்ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
கடந்த 12 நாட்களாக விடுமுறை விடப்பட்டுள்ளது. இது மேலும் சில நாட்களுக்குத்தொடரும்.
முன்னதாக முதல்வரை ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா சந்தித்துப் பேசினார்.












Click it and Unblock the Notifications