தெரியாது...தெரியாது...தெரியாது!
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன், தீவிரவாதிகளின் பிடியில் இருக்கிறாரா என்று எனக்குத் தெரியாது என்றார் தமிழக டி.ஜி.பி எப்.சி.சர்மா.
பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரைக் கடத்திச் சென்றுள்ள வீரப்பனைச் சந்திப்பதற்காக காட்டுக்குள் சென்றுள்ள அரசுத் தூதர் நக்கீரன்கோபால், காட்டில் ராஜ்குமாரையும், மற்றவர்களையும் சந்தித்தார்.
ராஜ்குமாருடன் தான் இருப்பது போன்ற புகைப்படங்களையும், தானும், ராஜ்குமாரும் பேசியுள்ள கேசட்டையும் சென்னைக்குக் கோபால்கொடுத்தனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக, வியாழக்கிழமை காலை நிருபர்களை டி.ஜி.பி சர்மா சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கோபாலிடமிருந்து கேசட்டும், இரு புகைப்படங்களும் வந்துள்ளன. ராஜ்குமார் மற்றும் அவருடன் கடத்தப்பட்டவர்களுடன நக்கீரன் கோபால் பேசுவதுபோல் புகைப்படங்கள் உள்ளன.
கேசட்டில் கோபாலும், ராஜ்குமாரும் பேசியுள்ளனர். ராஜ்குமார் கன்னடத்தில் பேசியுள்ளார். தான் நலமாகவும், சந்தோஷமாகவும் இருப்பதாகவும்,எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் கேசட்டில் ராஜ்குமார் கூறியுள்ளார்.
வீரப்பனின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் என்று அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில் வீரப்பனை இன்னும் சந்திக்கவில்லை என்றும், விரைவில்அவரை சந்தித்து அவரது கோரிக்கைகளுக்கு இரு மாநில அரசுகளும் தெரிவித்துள்ள பதில்களைத் தெரிவித்து அதற்கு வீரப்பனின் பதில்களைப் பெற்றுக்கொண்டு ஓரிரு நாளில் சென்னை வருவதாக கோபால் கூறியுள்ளார் என்றார் சர்மா.
அதன்பிறகு நிருபர்களின் கேள்விகளும் சர்மா அளித்த பதிலும்:
கேள்வி: கோபால் அனுப்பிய புகைப்படங்களில் வீரப்பன் இல்லையே. ஏன்?
பதில்: அது பற்றி எனக்குத் தெரியாது.
கே: கோபாலிடமிருந்து பதில் வர ஏன் காலதாமதம் ஏற்பட்டது?
ப: இப்பிரச்சனையில் காலதாமதம் ஏன் ஏற்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை. விரைவில் இப்பிரச்சனை சுமூகமாகத் தீர்க்கப்படும் என்றுநம்புகிறேன்.
கே: வீரப்பனின் பின்னணியில் தமிழ் விடுதலைப் படை இருக்கிறதாகக் கூறப்படுகிறதே?
ப: அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
கே: கேசட்டில் புது கோரிக்கைகள் ஏதும் இருக்கிறதா?
ப: இந்த கேசட் வீரப்பனிடமிருந்து வரவில்லை. கோபாலிடமிருந்துதான் வந்துள்ளது. ஆகவே அதில் புது கோரிக்கைகள் எதுவும் இல்லை.
கே: வீரப்பன் தனது கோரிக்கையில் 5 தீவிரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாரே? யார் அந்த 5 தீவிரவாதிகள்.?
ப: இந்த கோரிக்கை ஏன் வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. யார் அந்த 5 தீவிரவாதிகள் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் பெயரும்தெரியாது.
கே: 5 தீவிரவாதிகளை விடுவிப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளாரே?
ப: தீவிரவாதிகளைப் பரிசீலிப்பதாக முதல்வர் கூறியிருக்கலாம். ஆனால் அவர்கள் யார் என்ற விவரம் எதுவும் தெரியாது. அதுபற்றி தமிழக அரசிடம்தான் கேட்க வேண்டும். மேலும் 5 பேர் யார் என்று விசாரித்து வருகிறோம்.
கே: சமீபகாலமாக தீவிரவாதி மாறன் பற்றி செய்திகள் வெளியாகின்றனவே. யார் அந்த மாறன்? அவருக்கும், வீரப்பனுக்கும் என்ன தொடர்பு?
ப: மாறன் யார் என்று தெரியாது. அவரைப் பற்றி விசாரித்து வருகிறோம்.
கே: 5 தீவிரவாதிகளை விடுவிக்காததால்தான் ராஜ்குமார் விடுதலை தாமதமாகிறதா?
ப: அதுபற்றி எனக்குத் தெரியாது.
கே: இதற்கு முன் வந்த கேசட்டுகளில் வீரப்பன் குரல் இருந்ததா?
ப: அது பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது.
மகன்கள் மகிழ்ச்சி:
நிருபர்கள் சந்திப்பின்போது ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார் மற்றும் உறவினர் ஒருவர் இருந்தனர். இவர்கள்கோபால் அனுப்பிய கேசட்டில் இருப்பது ராஜ்குமாரின் குரல்தானா என்பதை உறுதி செய்தனர்.
பின்னர் நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது:
காட்டில் எங்களது தந்தை ராஜ்குமாரை கோபால் சந்தித்துப் பேசி கேசட் அனுப்பியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.
கேஸட்டில் உள்ளது எங்களது தந்தை குரல்தான். கேசட் வந்திருப்பது என் தாய்க்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், கர்நாடக மாநிலமக்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியை அளிக்கும்.
எங்கள் தந்தை ராஜ்குமாரை மீட்க தமிழக, கர்நாடக அரசுகள் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. எங்கள் தந்தை ராஜ்குமாரைவீரப்பன் கடத்தியுள்ளது பெரிய சிக்கலான பிரச்சனைதான்.
இது ஒரு தனி மனிதனுடைய பிரச்சனை அல்ல. ஏனெனில், எங்கள் தந்தை கர்நாடக மாநில மக்கள் அனைவருக்கும் பொதுவானவர்.
எங்கள் தந்தை விடுதலை ஆவதில் காலதாமதம் ஆவதை யாராலும் தடுக்க முடியாது. ஒரு பிரச்சனை உடனே முடியும் அல்லது 2,3 நாட்களில் முடியும் அல்லது10, 15 நாட்கள் கூட ஆகும். ஆகவே, அனைவரும் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications