இந்திய வீரர்களுக்கு மருந்து, உணவு கொண்டு செல்ல தனி விமானம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சியோரா லியோனில் உள்ள ஐ.நா.அமைதி காக்கும் படையில் உள்ள இந்திய ராணுவ வீரர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்து வகைகள்,பத்திரிக்கைகள் போன்றவற்றை எடுத்துச் செல்வதற்காக இந்தியாவிலிருந்து சிறப்பு விமானம் இயக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை முதல் இது இயக்கப்படும் என்று அரசுச் செய்திக்குறிப்பு கூறுகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வாரத்தில் சியாரோ லியோன்செல்லும் இவ் விமானம் நான்கு நாட்கள் கழித்து அங்கிருந்து திரும்பி வரும்.
சியாரோ லியோன் அரசுக்கும், புரட்சிகர ஐக்கிய முன்னணி படையி தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த 9 வருடங்களாக சண்டை நடந்து வருகிறது.மே மாதம் சண்டை உச்சக் கட்டத்தை அடைந்தது. இதையடுத்து அமைதியை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படை சியாரோலியோன அனுப்பப்பட்டது. இதில், இந்திய ராணுவ வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications