For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று வரலட்சுமி பூஜை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வெள்ளிக்கிழமை (11.08.2000) வரலட்சுமி பூஜை கொண்டாடப்படுகிறது.

இந்த பண்டிகை பெண்கள் சிறப்பாக கொண்டாடும் பண்டிகைளில் ஒன்றாகும்.

விஷணுவின் மனைவியான லட்சுமி அஷ்ட லட்சுமிகளும் (அஷ்டம் என்றால் எட்டு. அஷ்ட லட்சுமிகள் தனலட்சமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, தைரியலட்சுமி, ஜயலட்சுமி, வீர்யலட்சுமி, சந்தான லட்சுமி, கஜலட்சுமி, வித்யா லட்சுமி ஆகிய லட்சுமிகள் அஷ்ட லட்சுமிகள் என அழைக்கப்படுவர்) அஷ்டஐஸ்வர்யங்களையும் அளிக்க வேண்டும் என பிரார்தித்து செய்யப்படுகிற பூஜை இது.

இது பற்றி கூறப்படும் புராணக்கதை:

சாருமதி என்னும் குடுமபப் பெண்ணுக்கு வரலட்சுமி அம்மன் கனவில் தோன்றி ஆவணி மாதம் பவுர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக் கிழமையில் தன்னை பூஜைசெய்தால் கேட்கும் வரம் அருளப்படும் என திருவாய் மலர்ந்தருளினாள்.

அம்பிகையின் கட்டளைப்படி வீட்டை சுத்தம் செய்து . மாக்கோலமிட்டு தோரணங்கள் கட்டி அலங்கரித்து வாழை.இலையில் அரிசியைப் பரப்பி அதன் மீது கலசம்வைத்து அம்மனை வழிபட்டு பூஜை செய்து மங்கலச் சரட்டை (மஞ்சள் பூசப்பட்ட கயிறு) அணிந்து கொண்டார்.

அதன் பின் பூஜையின் பலனாக எல்லா வகை செல்வமும் பெற்று புத்திர பாக்கியமும் பெற்று சுமமாக வாழ்ந்து வந்தாள். இந்த வரலாற்றினைபார்வதிக்கு சொல்லி ஈஸ்வரன் நீயும் இந்த பூஜையை செய்து அனைத்து பாக்கியங்களையும் பெறுவாயாக என கூறியதாக அந்தக் கதையில்தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பண்டிகை நாளில் லட்சுமி முகம் ஒன்று வெள்ளியிலோ அல்லது வெள்ளி மூலாம் பூசப்பட்ட ஒன்றோ பூஜையறையில் வைக்கப்பட்டு பூஜை செய்வார்கள்.இந்த வெள்ளி லட்சுமி முகம் பரம்பரையாக பூஜை செய்பவர்கள் வீட்டில் இருக்கும். இல்லாதவர்கள் சொம்பில் சுண்ணாம்பு பூசி அதில் வரலட்சுமிஅம்பாள் முகம் வரைந்து வைத்து பூஜை நடத்துவர்.

அந்த அம்மனுக்கு பூச் சூடி பூஜைகள் செய்து வண்ங்குவர். பெண்கள் தீர்க்கசுமங்கலியாக இருக்க பிரார்த்தனை செய்து கழுதக்தில் தாலிச் சரடு ஒன்று அணிந்துகொள்வர். அன்று மாலையும் பூஜைகள் செய்யப்படும்.

கேட்ட வரனைத் தரும் வரலட்சுமியைப் பிரார்த்தித்து வரம் பெறுவது இந்த பண்டிகையின் சிறப்பம்சமாகும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X