ஜப்பானில் தொடரும் எரிமலைக் குமுறல்
டோக்கியோ:
ஜப்பானில் டோக்கியோ நகருக்கு தெற்கே உள்ள சிறு தீவில் எரிமலை குமுறியதால்,அப்பகுதியில் வசித்து வந்தவர்கள் வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
டோக்கியோவுக்கு தெற்கே உள்ள தீவில் உள்ள எரிமலை வியாழக்கிழமை காலைகுமுறியது. அதன் காரணமாக அந்தப்பகுதியில் புகையும். சாம்பலும் காற்றில்பரவியது.
ஒயாமா என்ற இந்த எரிமலை மியாகிஜீமா என்ற தீவில் உள்ளது. உள்ளூர் நேரப்படிகாலை 6.59க்கு எரிமலை புகையையும் சாம்பலையும் கக்கத் தொடங்கியது.
இந்தத் தீவில் 4,000 பேர் வசித்து வருகிறார்கள். எரிமலைக் குமுறலால் ஏற்பட்ட சேதம்குறித்துத் தெரியவில்லை. ஜுன் மாதத்திலிருந்து இந்த எரிமலை பலமுறைகுமுறியுள்ளது. கடைசியாக ஜுலை மாதம் 15-ம் தேதி இந்த எரிமலை குமுறியது..
எரிமலையின் சீற்றம் குறைந்து வந்தாலும், முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக அங்குவசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அரசு அறிவுறுத்திவருகிறது. எரிமலைக்கு அருகே 315 வீடுகளில் சுமார் 630 பேர் வசித்து வருகிறார்கள்.
எரிமலை சீற்றம் காரணமாக அந்தத் தீவில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.விமானப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது என விமான நிலைய அதிகாரிகள்தெரிவித்தனர்.
கடந்த இரண்டு மாதமாக இந்தப் பகுதியில், எரிமலை சீற்றம் காரணமாகநூற்றுக்கணக்கான சிறு நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. ஒயாமா எரிமலையின் மிகப்பெரிய சீற்றம் 1983-ம் ஆண்டு நிகழ்ந்தது. அப்போது 400 வீடுகள் அழிந்தன. அருகில்இருந்த காடுகளும் எரிந்தன. அங்கிருந்த ஏரி ஒன்றும் பாழானது. 1940-ல்எரிமலையிலிருந்து வந்த எரிமலைக் குழம்பில் சிக்கி 11 பேர் இறந்தனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!