காஷ்மீர்: கார் குண்டு வெடிப்புக்கு அமெரிக்கா கடும் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

காஷ்மீரில் ஸ்ரீநகரில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 13 போலீசார்-ராணுவத்தினர் கொல்லப்பட்டதற்கு அமெரிக்காகடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் பெளசர் கூறுகையில், இந்த வெறிச் செயல் நிச்சயம்அமைதிக்கோ, காஷ்மீர் பிரச்சனையை தீர்க்கவோ உதவப் போவதில்லை.

இந்தப் பிரச்சனையில் தொடர்புள்ள அனைத்துத் தரப்பினரும் அமைதி மூலமே இதற்கு தீர்வு காண முடியும்என்பதை உணர வேண்டும் என்றார்.

வெள்ளை மாளிகையின் பாதுகாப்புக் கவுன்சில் செய்தித் தொடர்பாளர் பி.ஜே. குரோலே கூறுகையில், அடுத்தமாதம் ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் இந்தியப் பிரதமர் வாஜ்பாயையும் பாகிஸ்தான்ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரபையும் நேரில் சந்திக்க வைக்க அமெரிக்கா விரும்புகிறது என்றார்.

இது போன்ற ஒரு சந்திப்புக்கு தாங்கள் தயார் என அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அறிவித்துள்ளது.ஆனால், முஷாரபை சந்திக்க தான் தயாராக இல்லை என வாஜ்பாய் ஏற்கனவே திட்டவட்டமாகத்தெரிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாத்ரீகர்கள் கொலை: பாகிஸ்தானுக்கு கிளின்டன் கண்டன கடிதம்:

சமீபத்தில் காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் உள்பட 100 அப்பாவிகளும், போலீசாரும் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதைக் கண்டித்துபாகிஸ்தானுக்கு அமெரிக்க அதிபர் கிளின்டன் கடிதம் எழுதியுள்ளார்.

எங்களுக்கு கிளின்டனிடமிருந்து கடிதம் வந்துள்ளது என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் சத்தார் நிருபர்களிடம் கூறினார். அவர் கூறுகையில், ஆகஸ்ட்3ம் தேதி இந்த கடிதம் வந்தது. ஆனால், இதில் பாகிஸ்தானை கிளின்டன் குறை சொல்லவில்லை.

இந்தக் கடிதத்துக்கு 4ம் தேதியே பாகிஸாதான் ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் பதில் கடிதம் அனுப்பிவிட்டார். அதில், காஷ்மீர் படுகொலைகளை தான்கண்டித்திருப்பதை முஷாரப் கிளின்டனுக்கு சுட்டிக் காட்டியுள்ளார் என்றார்.

பாகிஸ்தானுக்கு இந்த கொலைகளில் தொடர்பே இல்லை என்றால், கிளின்டன் ஏன் உங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என ஒரு நிருபர் கேட்டார்.இதற்கு பதிலளித்த சத்தார், உண்மை நிலை குறித்து அறிந்து கொள்ளவும், அமைதியை வலியுறுத்தவும் தான் இந்த கடிதத்ததை கிளின்டன் அனுப்பினார்என்றார்.

காஷ்மீரில் இருந்து தீவிரவாதிகளை திரும்ப அழைத்துக் கொள்ளுமாறும் இந்தியாவுடன் உடனே பேச்சுவார்த்தையை தொட்குமாறும் கிளின்டன்நிர்பந்தித்துள்ளாரா என்று கேட்டபோது, கிளின்டன் இந்தியா-பாகிஸ்தான் வந்து சென்றதில் இருந்தே அமைதி ஏற்பட பாடுபட்டு வருகிறார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+