ராணுவ விமானங்கள் மீது புலிகள் ஏவுகணைத் தாக்குதல்: அதிர்ச்சியில் இலங்கை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

விடுதலைப் புலிகளிடம் அமெரிக்காவின் ஸ்டிங்கர் ரக ஏவுகணைகளும், ரஷ்யாவின் சாம் ரக ஏவுகணைகளும்இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இந்த சாம் (சோல்டர் எய்டட் மிசைல்) மற்றும் ஸ்டிங்கர் ஏவுகணைகளைக் கொண்டு இலங்கை விமானப் படையின்அனைத்து விதமான விமானங்கள், ஹெலிகாப்டர்களை புலிகள் தாக்கி வருகின்றனர்.

கடந்த செவவாய்க்கிழமை வடக்கு யாழ்பாணத்தில் சாலை பகுதி அருகே புலிகளின் நிலைகள் மீது தாக்குதல்நடத்தச் சென்ற ராணுவ விமானத்தின் மீது புலிகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இவை எந்த ரகத்தைச் சேர்ந்தஏவுகணைகள் என்பது இன்னும் தெரியவில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

ஒரு அதிகாரி கூறுகையில், புதிதாக வாங்கப்பட்ட ஒரு விமானத்தின் மீதும் புலிகள் ஏவுகணைகளால் தாக்கினர்.அந்த ஏவுகணையை விமானத்தில் உள்ள கேமரா படம் பிடித்துள்ளது.

ரஷ்யா, அமெரிக்கா தவிர்த்து பிற நாடுகளிடமிருந்து புலிகள் நவீன ரக ஏவுகணைகளை வாங்கியிருக்கவாய்ப்புள்ளது என்றார்.

புலிகளிடம் பெரும் எண்ணிக்கையிலான விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இருக்கலாம் எனவும் ராணுவம்கருதுகிறது. ஏவுகணைகளைக் கொண்டு புலிகள் தாக்குதல் நடத்தியிருப்பது இலங்கை ராணுவத்தையும் விமானப்படையையும் நிலை குலையச் செய்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+