திண்டுக்கல்லில் ரூ 1.8 கோடியில் உருவாகிறது விளையாட்டு வளாகம்
சென்னை:
திண்டுக்கல்லில் ரூ 1.8 கோடி செலவில் விளையாட்டு வளாகம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை விவரமாவது:
மாநிலம் முழுவதும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு வளாகங்களைக் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் நிதியுதவியுடன் ஈரோடு, திருச்சி, சேலம் ஆகிய ஊர்களில் உள்ள விளையாட்டு வளாகத்தில் நீச்சல் குளம் அமைக்கப்படும். இதற்காகஒவ்வொரு ஊருக்கும் ரூ 85 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஏற்கனவே மாநிலம் முழுவதும் கோகோ, கபடி, கூடைப்பந்து, கைப்பந்து, போன்ற விளையாட்டுக்களை நடத்துவதற்கான விளையாட்டுவளாகம் அமைக்கத் தீர்மானித்திருந்தது. அதன்படி தற்போது திண்டுக்கல்லில் விளையாட்டு வளாகம் அமைக்கப்படவுள்ளது என்று தமிழக அரசுவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications