மேட்ச் பிக்சிங்: 3 தென் ஆப்பிரிக்க வீரர்கள் மீது விசாரணை
Subscribe to Oneindia Tamil
ஜோகானஸ்பர்க்:
கிரிக்கெட் மேட்ச் பிக்சிங் விவகாரம் தொடர்பாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள கிப்ஸ், ஹென்ரி வில்லியம்ஸ்,பீய்ட்டர் ஸ்டைர்டம் ஆகியோர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தென் ஆப்பிரிக்ககிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மேட்ச் பிக்சிங் குறித்து விசாரித்து வரும் கிங்க்ஸ் கமிஷனில் இவர்கள் கொடுத்துள்ள வாக்குமூலத்தின்அடிப்படையில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வரும் 19 தேதி முதல் இவர்களின் வாக்குமூலத்தின் மீதுவிசாரணை நடக்கவுள்ளது.
மேட்ச்சில் தோற்பதற்காக தங்களுக்குப் பணம் தருவதாக முன்னாள் கேப்டன் ஹன்சி குரேனியே கூறியதாக இந்தமூவரும் கிங்ஸ் கமிஷனில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications