தொடர்ந்து சரிகிறது இந்திய ரூபாயின் மதிப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை:

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.

ரூபாயின் மதிப்பு மேலும் குறைவத்ை தடுக்க சென்ட்ரல் வங்கி சில நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

இந்தியாவிலிருந்து பெரும் அளவில் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் தங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரவேண்டிய பக்கித் தொகைகளை உடனடியாக வசூலிக்குமாறு சென்ட்ரல் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. இதன்மூலம் அன்னியச் செலாவணி (பாரின் எக்ஸ்சேஞ்ச்) வரத்து அதிகரித்து ரூபாயின் மதிப்பை நிலை நிறுத்த முடியும்என சென்ட்ரல் வங்கி நினைக்கிறது.

இப்போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.46 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஜனவரியில்இருந்து ரூபாயின மதிப்பு சரிந்து வந்துள்ளது. ஆகஸ்ட் வரை 5.2 சதவீதம் மதிப்பு குறைந்துள்ளது.

இந்தியாவுக்கு டாலர்கள் வருவது குறைந்தது தான் ரூபாயின் மதிப்பு சரிந்ததற்குக் காரணம். இதையடுத்துஏற்றுமதியாளர்கள் தங்களது ஏற்றுமதிக்கான சிறப்பு வங்கிக் கணக்குகளில் உள்ள டாலர்களை உடனே உள்நாட்டுசந்தைக்குத் திருப்பி விட வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இந்தக் கணக்குகளில் சுமார் 2 பில்லியன்டாலர்கள் உள்ளன. இதன் மூலம் உள்நாட்டில் டாலரின் வரத்து அதிகரிககும்.

டாலருக்கு அதிக தேவை ஏற்பட்டதால் அதை வைத்திருப்பவர்கள் பதுக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால், தான்டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிந்தது என சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இது தவிர வெளிநாட்டு நேரடி முதலீட்டாளர்கள் இந்தியாவில் தாங்கள் செய்த முதலீட்டை மே மாதத்தில் இருந்துதிரும்பப் பெற ஆரம்பித்துவிட்டனர். இந்தப் பணத்தை அவர்கள் ஆசியாவில் வளர்ந்து வரும் பிற சந்தைகளில்முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனாலும் கடும் டாலர் தட்டுப்பாடு ஏற்பட்டது என்கிறார் அன்னியசெலாவணி டீலரான ஷ்யாம் போட்டார்.

கடந்த வாரம் முழுவதுமே நாளுக்கு நாள் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்தது. ஆனால்,புதன்கிழமையன்று கார்பரேட் நிறுவனங்களிடமிருந்து டாலர்கள் சந்தைக்கு வந்ததால் இந்திய ரூபாய் கொஞ்சம்மூச்சுவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+