For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆபத்தான ஐந்து பேர்

By Staff
Google Oneindia Tamil News

விட்டில் பூச்சி ஏன் அழிகிறது? கண்தான் காரணம். நெருப்பைத் தள்ளி நின்று பார்த்தால் போதாதா? இன்னும் நெருக்கமாக, மிக நெருக்கமாக என்றுஅருகில் போனது. விட்டில் பூச்சி அழிகிறது. கண்ணால் அழிகிறது விட்டில் பூச்சி.

யானைக்கு அழிவு எதனால்? யானை பிடிப்பவர்கள் எப்படிப் பிடிக்கிறார்கள். காட்டிலே பழக்கிய பெண் யானையைத் தொலைவில் நிறுத்துவார்கள். அதன்அருகில் பெரிய பள்ளம் வெட்டி இலை தழைகளைப் போட்டு மூடி வைப்பார்கள்.

காட்டில் அலையும் ஆண் யானை, மெய், இன்பம் என்ற உடல் சுகம் கருதி பெண் யானையை நோக்கி வரும். வழியில் பள்ளத்தில் விழுந்து மனிதர்களிடம்மாட்டிக் கொள்ளும்.

வாழ்நாள் முழுவதும் காட்டில் மரம் இழுத்து, மனிதர் தரும் பணிகளைச் செய்து மனம் வெந்து, அவர்கள் தருகிற குறைந்த உணவை உண்டு துன்பம் அடையும்யானைக்கு இன்னல் எதனாலே? மெய் என்ற சரீர ஆசைதான் காரணம்.!

கண்ணாலே விட்டில் அழியும் - காதாலே அசுணமா அழியும், நாசியினால் வண்டு, வாயாலே மீன், மெய்யாலே யானை இவை ஒவ்வொன்றும் ஒன்றால்அழிகிறது. மனிதனோ ஐந்தாலும் அழிகிற வாய்ப்பு உடையவன். எனவே எச்சரிக்கை எவ்வளவு தேவை.

ஒரவொட்டார் ஓன்றை உள்ளவொட்டார் மலரிட்டு உனதுதான் சேர்க்கையால் சேர்ந்தவர்கள் ஐவர் என்று ஐவரை குறை சொல்கிறார் அருணகிரிநாதர்.

இந்த ஐவரை நாம் அடக்கி ஆண்டால் நாம் வசிக்கிறோம். அவர்களுக்கு அடங்கி நடந்தால் நாம் இருக்கிறோம்.

ஐவரை அடக்க வழி வேண்டுமா?

யோகம் பயிலுவோம் வாருங்கள்! முறையான குருமூலம் யோகாவைப் பயின்று தொடர்ந்து வருவோம்?

வாசி என்றால் காற்று - அதைத் திருத்தினால் சிவா காற்று வெளியேறுவதால் அழிவு. உள்முகம் திரும்பி நிறுத்தினால் விருத்தி, காற்று வாசிதிரும்பினால் சிவா. நீண்ட வாழ்வு.

இந்த யோகம் எப்படிச் செய்வது?

கவலை வேண்டாம். நல்ல குரு மூலம் கற்பதே உத்தமம். புத்தகம் மூலம் கற்பது இரண்டாம் பட்சம்.

தூய வஸ்திரத்தின் மீதமர்ந்து, நாசி நுனியை நோக்கியபடி, உடலை நேராக வைத்து மூச்சுக் காற்றை ஒழுங்குடன் நிலை நிறுத்தும் யோகத்தை பகவத் கீதையும்விளக்குகிறது. அதனை பின்பற்றுவது வெற்றியின் முதல்படி. சொன்னதை கேட்கும் உடம்பை அமைத்துக் கொள்ள யோகம் நமக்கு கற்றுத் தருகிறது.

திருமந்திரம் கீதை வற்புறுத்தும் யோகாசனம். வாழ்க்கையை வெற்றி காண விரும்பும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் வித்தை.

சோம்பல் உயிருடன் இருக்கும் போதே செத்துப் போகும் வழிமுறை. அதனைத் தூக்கி எறிவோம். காலையில் எத்தனை மணிக்கு தூங்கி எழுகிறோமோ,எழ நினைக்கிறோமோ அந்த நேரத்துக்கே எழுந்திருப்போம்.

வாழ்க்கையை ஜெயிக்க, யோகம் பயிலுவோம் வாருங்கள்! இருப்பது நமது வேலையில்லை. நாம் வாழப்பிறந்தவர்கள். வாழ்வை வாழுங்கள்.

இப்படி வாழ்பவனை ஸ்திதப்ரஞ்ஞன் என்கிறது கீதை. தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தை தோற்றுவித்த சுவாமி சிவானந்தர் யோகம் செய்யும் வழிமுறைகளைவிளக்கி இருக்கிறார். அதனைப் பயின்று செய்யலாம். ஆனால் குருவழி வித்தை.

(தொடரும்)
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X