உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட வழி செய்யுங்கள்
சென்னை:
சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழில் மனுத்தாக்கல் செய்யவும், வாதாடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றவக்கீல்கள் சங்கத்தினர் முதல்வருக்கும், கவர்னருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத்தின் அசாதாரணக் கூட்டம் அதன் தலைவர் கருப்பன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது.
இக்கூட்டத்தில், உயர்நீதிமன்றத்தில் தமிழில் மனுத்தாக்கல் செய்யவும், தமிழில் வாதாட தேவையான அங்கீகாரம் பெற நடவடிக்கைகளைஎடுக்குமாறு கவர்னர் மற்றும் முதல்வரை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரப்பட்டது.
பெரும்பான்மை அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை அமல்படுத்த தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு கவர்னர்,முதல்வர் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோருக்கு கோரிக்கை விடப்பட்டு தீர்மானத்தின் நகம் அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications