வாக்காளர் அடையாள அட்டை: மக்களிடம் வரவேற்பு இல்லை
சென்னை:
தமிழ்நாட்டில், வாக்காளர் அடையாள அட்டை பெறுவதில் மக்கள் அதிக ஈடுபாடு காட்டாததன் காரணமாக,அடையாள அட்டை வழங்கும் பணிகள் மந்தமாக உள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தெரிவித்துள்ளார்.
இது குறித்து நரேஷ் குப்தா வெளியிட்ட அறிக்கை:
சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ஈரோடு மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் வாக்காளர் அடையாளஅட்டை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சில சட்டசபைத் தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை பெறுவதில் மக்கள் அவ்வளவாக ஈடுபாடுகாட்டாததால், பணிகள் மந்தமாக உள்ளது. அடையாள அட்டை இல்லாவிட்டாலும், வேறு ஆவணங்களில் பெயர்இருந்தால், அதைக் காட்டி ஓட்டுப் போடலாம் என்று தவறாகக் கருதிக் கொண்டு வாக்காளர் அடையாள அட்டைதேவையில்லை என்று மக்கள் நினைக்கிறார்கள். அது தவறு.
பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் போன்ற புகைப்படம் ஒட்டிய ஆவணங்கள் மட்டுமே ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும்.
அல்லது ரேஷன்கார்டு காட்டினால், அதிலுள்ள குடும்பத் தலைவருடன் சேர்ந்து ஓட்டுச் சாவடிக்குச் செல்லவேண்டும்.
இந்த நிலையில் வாக்காளர் அடையாள அட்டை பெறுவதில் மக்கள் அதிக ஈடுபாடு கொண்டு, வாய்ப்புக்களைநழுவவிடாமல் அடையாள அட்டைகளை வாங்கிச் செல்ல வேண்டும் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications