நீதிமன்றத்தை புறக்கணிக்கும் சசிகலா: நீதிபதி கடும் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஆகஸ்ட் 16-ம் தேதி நடைபெறும் விசாரணையில் கட்டாயம்ஆஜராக வேண்டும் என்று சசிகலாவுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்குமுதலாவது சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இவ் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து ஜெயலலிதாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மற்ற 3 பேரும் நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால், வழக்குவிசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராகாமல் சசிகலா தவிர்த்து வந்தார். வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 11-ம்தேதி) 4-வது முறையாக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

சசிகலாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், ஹைதராபாத்தில் தங்கி அவர் ஆயுர்வேத சிசிக்சை பெற்றுவருவதாக அவரது வழக்கறிஞர்கள் கூறினர். கடந்த 9-ம் தேதி நீதிமன்றத்தில் சசிகலா ஆஜராகவேண்டும் என்றுநீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் உத்தரவிட்டார்.

ஆனால், அன்றைய தினம் சசிகலா ஆஜராகவில்லை. 11-ம் தேதி நடைபெறும் விசாரணைக்கு சசிகலா நிச்சயம்ஆஜராவார் என்று அவரது வழக்கறிஞர்கள் உறுதிமொழி அளித்தனர். ஆனால், 11-ம் தேதியும் நீதிமன்றத்துக்குசசிகலா வரவில்லை.

இதனால், நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் கோபமடைந்தார். சசிகலாவுக்கு உடல் நிலை சரியில்லை என்றுஅவரது வழக்கறிஞர் கூறியதை ஏற்றுக் கொள்ள நீதிபதி மறுத்துவிட்டார்.

ஆகஸ்ட் 16-ம் தேதி நீதிமன்றத்தில் சசிகலா கட்டாயம் ஆஜராகவேண்டும். இல்லையென்றால் அவரைநீதிமன்றத்துக்கு வரவழைக்க கட்டாய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி எச்சரித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+