ஒருவழியாய் மீண்டும் துவங்குகிறது கோவை சட்டக் கல்லூரி

Subscribe to Oneindia Tamil

கோவை:

மாணவர்களின் போராட்டத்திற்கு பின் மீண்டும் ஆகஸ்ட் 14ம் தேதி கோவை சட்டக்கல்லூரி செயல்படத் தொடங்குகிறது.

கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் கடந்த ஜூலை 25ம் தேதி முதல் உண்ணாவிரதப்போராட்டம் மேற்கொண்டனர். சட்டக் கல்லூரி துவங்க தனியார் நிறுவனங்களுக்குஅனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து மூடப்பட்டிருந்த கல்லூரி, வரும் ஆகஸ்ட் 14ம் தேதி முதல் செயல்படத்துவங்கும் என கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார்.

கோவையில் உள்ள அவிநாசிலிங்கம் பல்கலைக் கழகத்தில் சட்டக் கல்லூரி துவங்கமுடிவு செய்யப்பட்டு இதற்கான அறிவிப்பையும் பல்கலைக் கழகம் வெளியிட்டது.

தற்போது மாணவிகள் சேர்க்கை நடந்து கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. ஆரம்பம்முதலே சட்டக் கல்லூரி துவங்குவதில் பல்வேறு எதிர்ப்புகளை இந்தப் பல்கலைக்கழகம் சந்தித்து வந்துள்ளது.

முதலில் தமிழக அரசு போட்ட உத்தரவால் ஆடிப்போன இப் பல்கலைக் கழகம், மத்தியஅரசின் உதவியுடன் மீண்டும் தலைதூக்கியது. தமிழக அரசு, தமிழகத்தில் அம்பேத்கார்சட்டப் பல்கலைக் கழகத்தின் அனுமதியின்றி, எந்த சட்டக் கல்லூரியும் செயல்படக்கூடாது என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

ஆனால், இதனை மீறி அவிநாசிலிங்கம் நிகர்நலை மகளிர் பல்கலைக் கழகம், சட்டக்கல்லூரியை துவக்கியது. பின்னர் பல்கலைக் கழக மானியக் குழுவிடம் (யூ.ஜி.சி)அனுமதி பெற்று கல்லூரியைத் துவக்கியது.

அடுத்து பார்கவுன்சிலிடம் அனுமதி பெற்றது. அவிநாசிலிங்கம் நிகர்நிலைப்பல்கலைக் கழகம், தனியார் பல்கலைக் கழகம் என்பதால், கோவை சட்டக் கல்லூரிமாணவர்களிடையே கடும் எதிர்ப்புக் கிளம்பியது.

எனவே, இந்த சட்டக் கல்லூரிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என சாகும் வரைஉண்ணாவிரதம் மேற்கொண்டனர். 27 பேர் மயக்கமடைந்து சிகிச்சை பெற்றனர்.இதையடுத்து அமைச்சர் ஆலடி அருணாவுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு,பார்கவுன்சில் இக்கல்லூரிக்கு அனுமதி வழங்கவில்லை என்ற அறிவிப்புவெளியானது.

இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதைத் தொடர்ந்து கல்லூரிவரும் ஆகஸ்ட் 14ம் தேதி முதல் செயல்படும் என்ற அறிவிப்பை கல்லூரி முதல்வர்வெளியிட்டுள்ளார்.

அதேசமயம், அவிநாசிலிங்கம் நிகர்நிலை மகளிர் பல்கலைக் கழகத்தின் வேந்தர்ராஜம்மாள் தேவதாஸ், பல்கலைக் கழகத்திற்குள்ள அதிகாரம் குறித்தும், பார்கவுன்சில்அனுமதி பெற்றிருப்பது குறித்தும், விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 14ம் தேதி மீண்டும் சட்டக் கல்லூரி துவங்கும்போது,மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதிப்பார்களா என்பது தெரிய வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+