ஆக. 24-ல் தமிழகம் முழுவதும் இ.கம்யூனிஸ்ட் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மின்சாரத் துறையை தனியார்மயமாக்குவதை எதிர்த்து ஆகஸ்ட் 24-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற அக் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம்நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு கட்சியின் மாநிலச் செயலர் என். சங்கரய்யா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மின்சாரத் துறையை தனியார்மயமாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதனால், மின்கட்டணம் உயரக்கூடும். மத்திய, மாநில அரசுகளின் இம் முடிவைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள அரசுஅலுவலகங்கள் எதிரே ஆகஸ்ட் 24-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

வெளிநாடுகளில் இருந்து சர்க்கரை, தேயிலை, தேங்காய், முந்திரி, ரப்பர் போன்ற பொருட்களை இறக்குமதிசெய்வதை நிறுத்த வேண்டும். கோயில் நிலங்களில் பயிரிட்டு வரும் விவசாயிகளின் குத்தகை பாக்கியை ரத்துசெய்து அந்த நிலங்களை அவர்களுக்கே வழங்கவேண்டும்.

நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறவேண்டும்.போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை உடனே அமல்படுத்தவேண்டும் என்பது உள்ளிட்டபல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கூட்டத்தில் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் கே. வரதராஜன், மத்திய குழு உறுப்பினர்கள் என்.வரதராஜன், டி.கே. ரங்கராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+