புலிகளை ராணுவத்தால் தோற்கடிக்க முடியாது: இலங்கை அமைச்சர் ஒப்புதல்
கொழும்பு:
விடுதலைப்புலிகளை ராணுவத்தால் தோற்கடிக்க முடியாது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
விடுதலைப்புலிகள் பல ஆண்டுகளாக ராணுவத்திற்கு எதிராக, நவீன ஆயுதங்களுடன் போரிட்டு வருகின்றனர்.
அவர்களை ராணுவத்தால் தோற்கடித்து விடலாம் என நினைப்பது அபத்தம். கடந்த பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடு மற்றும் இர தரப்பிலும்நம்பிக்கையின்மை காரணமாக இந்த போர் நடந்து வருகிறது.
ராணுவத்தால் புலிகளை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது. தமிழர்கள் அதிகம் வாழும் மாகாணங்களில் ஜனநாயக உரிமைகள், கூடுதலாக நிர்வாகஅதிகாரங்கள் ஆகியவற்றை அளிக்காமல் இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது.
எனவே, இதற்கு வகை செய்யும் அரசியல் சட்டத்த்திற்கு கட்சி வேறுபாடின்றி, ஐக்கிய தேசியக் கட்சி எம்பிக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.இனப்பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண முயற்சி எடுத்துவரும் வேளையில், புலிகளை எதிர்த்து அரசு தொடர்ந்து போரிட்டு வருகிறது.
புலிகள் தனிநாடு கோரி வந்தாலும், தமிழர்கள் பலரும் அந்தக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை என்றார் கதிர்காமர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications