அசாமில் 5 உல்பா தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
Subscribe to Oneindia Tamil
கவுஹாத்தி:
அசாமில் ராணுவமும், போலீசாரும் சேர்ந்து நடத்திய தாக்குதலில் 5 உல்பா தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த வெடிப்பொருட்கள், துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கவுஹாத்தியில், டின்சோகியாவிலுள்ள ரங்ககோரா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகப் போலீஸாருக்குத் தகவல்கிடைத்தது.
இதையடுத்து போலீஸாரும், ராணுவ வீரர்களும் அந்த ஹோட்டலைச் சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டனர். இத்துப்பாக்கிச் சூட்டில் 5 உல்பாதீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மேலும் 11 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதற்குப் பழிவாங்கும் வகையில், ராங்கியா- சலஹாத்தி பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரை தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்துத் தகர்த்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications