தூத்துக்குடியில் பிடிபட்ட 100 ரூபாய் கள்ள நோட்டுக்கள்
தூத்துக்குடி:
கூட்டுறவு வங்கி அதிகாரியிடமிருந்து கத்தை கத்தையாக 100 ரூபாய் கள்ள நோட்டுக்கள் பறிமுதல்செய்யப்பட்டன. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது பற்றி கூறப்படுவதாவது:
தூத்துக்குடி மாவட்டத்திலும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளிலும் 100 ரூபாய் கள்ள நோட்டுக்கள் புழக்கம் அதிகமாகஇருப்பதாகப் போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள சாயர்புரத்தில் இரண்டுபேரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதானவர்களில் ஒருவரான ஜெயபால், ஆறுமுகநேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளராகஇருப்பவர். இவரிடம் விசாரணை நடத்தியபோது, கள்ள நோட்டுக்களைப் புழக்கத்தில் விட்டு வந்த மேலும் 3 பேர்பற்றிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் அந்த மூன்று பேரைக் கைது செய்தனர். கைதான 5 பேரிடமிருந்தும் ரூ. 70 ஆயிரம்மதிப்புள்ள 100 ரூபாய் கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கள்ள நோட்டுக் கும்பலைக் கைது செய்ய தீவிர நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தனி போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட போலீஸ்கண்காணிப்பாளர் சைலேஷ்குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications