திண்டுக்கல்லில் கர்ப்பிணி கற்பழித்துக் கொலை

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே 8 மாத கர்ப்பிணி கற்பழித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 பேரைப் போலீஸார்தேடி வருகின்றனர்.

இது பற்றி கூறப்படுவதாவது:

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் ஒரு ஓடை உள்ளது. வியாழக்கிழமை மாலை ஓடைப் பக்கமாக 30 வயதுமதிக்கத்தக்க பெண்ணும், 2 வாலிபர்களும் வந்தனர். வழிமறித்து விசாரித்த எஸ்டேட் மேனேஜரிடம் சும்மா சுற்றிப்பார்க்க வந்தாகக் கூறிவிட்டுச் சென்றனர்.

சிறிது நேரத்தில் 2 வாலிபர்கள் மட்டும் திரும்பி வந்தனர். அவர்களிடம் உங்களுடன் வந்த பெண் எங்கே என்றுமேனேஜர் கேட்டார். அவரைக் கீழே தள்ளிவிட்டு இருவரும் ஓடிவிட்டனர்.

சந்தேகம் அடைந்த எஸ்டேட் மேனேஜர், அப் பெண்ணுடன் வாலிபர்கள் சென்ற இடத்துக்குச் சென்று பார்த்தார்.அங்கு அந்த பெண் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். உடனே அவர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கொலை செய்யப்பட்டுக் கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டுபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரிசோதனையில் அப்பெண் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டதும், 8 மாத கர்ப்பிணியாக இருந்ததும்தெரியவந்தது.

பெண்ணின் முகம் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக கீழே கிடந்த காய்ந்த இலைகளால் பெண்ணின்முகத்தை இரு வாலிபர்களும் எரித்துவிட்டனர்.

இச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கொலை செய்த இரு நபர்களையும் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+