இதோ, நாட்டுக்குள் ஒரு வீரப்பன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கொலை, கடத்திச் சென்று பணம் பறித்தல் ஆகியவை என்ன வீரப்பனுக்கு மட்டுமே சொந்தமான தனிச் சொத்தா?. இதேவேலைகளை நாட்டுக்குள் (சென்னையில்) இருந்து கொண்டே செய்து வந்த பிரபல ரவுடி காட்டான் சுப்பிரமணியம் துப்பாக்கிமுனையில் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் உள்ள பணக்காரர்களை கடத்தி சென்று பணம் பறிக்கும் கூலிப்படையின் தலைவர் காட்டான் சுப்பிரமணியம். இவர்மீது 4 கொலை வழக்குகள், 8 கொள்ளை வழக்குகள், ஆட்களை கடத்திச் சென்ற எட்டு வழக்குகளும் இருக்கின்றன.

சென்னை விருகம்பாக்கத்தில் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தும் பாஸ்கர் என்பரை கடத்திச் சென்று பத்து லட்ச ரூபாய் கேட்டுமிரட்டினார். இறுதியில் 65 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு விடுவித்தார். அடுத்து மேற்கு மாம்பலத்தில் தொழிலதிபர் ஒருவரின்மேனேஜரை கடத்தினார்.

சென்னையைச் சுற்றி இது போன்ற பல கடத்தல்கள் சமீபகாலமாக நடத்தி வந்தார்.

இந்த தகவல்களும், புகார்களும் வரத்துவங்க போலீஸார் உஷாரானார்கள். காட்டான் சுப்பிரமணியனையும் அவரதுகோஷ்டியையும் பிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். இதற்காக கிண்டி துணை கமிஷ்னர் ராஜேந்திரன் தலைமையில் தனிப்படைஅமைக்கப்பட்டது.

இதற்காக போலீஸார் ரவுடிக் கும்பல் போலவே நடிக்க ஆரம்பித்தனர். முதலில் டெலிபோன் மூலமாக காட்டான்சுப்பிரமணியத்திற்கும், அவரது கூட்டாளிகளுக்கும் ஆசை காட்டி ஒரு இடத்தில் சந்திக்க அழைப்பு விடுத்தனர்.

இதை நம்பி போலிஸார் சொன்ன இடத்திற்கு தனது டாட்டா சுமோ காரில் கூட்டாளிகளுடன் போலீஸ் சொன்ன இடத்திற்கு வந்தார்சுப்பிரமணியம்.

அங்கே போலீஸார், துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர். காட்டான் சுப்பிரமணியம் உட்பட அவரது கூட்டாளிகளானமகாலிங்கம், சங்கர், சீமான் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களது காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

காருக்குள்ளிருந்து பட்டாக் கத்திகள், உருட்டுக் கட்டைகள் போன்றவை கைப்பற்றப்பட்டன. காட்டான் சுப்பிரமணியத்திடம்தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+