சுதந்திர தின பாதுகாப்பு: டெல்லியில் அத்துமீறி நுழையும் விமானங்களை சுட்டுத் தள்ள உத்தரவு
டெல்லி:
டெல்லியில் வான்வெளியில் அனுமதியின்றி நுழையும் விமானங்களை சுட்டுத் தள்ளுமாறு விமானப் படைக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லியில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
சுதந்திர தினத்தன்று இந்தியா முழுவதும் பெரும் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள்திட்டமிட்டுள்ளனர்.
இது தவிர வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த உல்பா, நாகா, போடோ தீவிரவாதிகள் அன்றைய தினம்போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.
இதையடுத்து நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பில் ராணுவமும், அந்தந்த மாநில போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர்வாஜ்பாய் சுதந்திர தின உரையாற்றும்போது அங்கு குண்டுகளை வெடிக்கச் செய்ய பாகிஸ்தான் ஆதரவு பெற்றதீவிரவாதிகள் திட்டமிட்டுள்ள விவரம் இந்திய புலனாய்வு அமைப்புகளுக்குத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து கடும் சோதனைகளில் புலனாய்வு அமைப்புகள் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு சோதனைநடத்தியபோது ஹிஸ்புல் முஜாஹீதீன் அமைப்பைச் சேர்ந்த ஜனத்குல் என்ற தீவிரவாதி சிக்கினான்.ஆப்கானிஸ்தானை சேர்ந்த இவன், பாகிஸ்தானில் வசித்து வருகிறான்.
அங்கு தீவிரவாத பயிற்சியும் பெற்றவன். இவன் டெல்லியில் ஊடுருவி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்துபோலீசார் பெரும் சோதனையில் ஈடுபட்டு இவனைப் பிடித்தனர்.
இவன் செங்கோட்டையிலும் டெல்லியின் பல இடங்களிலும் வைப்பதற்காக குண்டுகளை மறைத்துவைத்திருந்தான். டெல்லி நிஜாமுதீன் பகுதியில் ஒரு பூங்காவில் இவன் பூமிக்குள் புதைத்து வைத்திருந்த 10 கிலோஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகள், 2 டைம் பாம்கள், 4 பென்சில் குண்டுகள், 6 பேட்டரிகள், 30 துப்பாக்கிகள்,தோட்டக்களையும் போலீசார் கைப்பற்றினர்.












Click it and Unblock the Notifications