சென்னையில் செப்.1 முதல் துப்பாக்கி சுடும் போட்டி
அசன்சால்:
10வது தேசிய துப்பாக்கிச் சுடும் போட்டி சென்னையில் நடக்கிறது. வரும் செப்டம்பர் 1 ம் தேதி முதல் இந்தப் போட்டி நடக்கும்.
இப் போட்டியில் மேற்கு வங்காளத்திலிருந்து 33 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
மேற்கு வங்க ஃரைபில் அசோசியேஷன் தலைவர் டாக்டர் கல்யாண் பானர்ஜி கூறுகையில், எங்கள் அணி அண்மையில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கிசுடும் போட்டியில் கலந்து கொண்டு 200 பாயிண்டுகளை எடுத்து வெற்றி பெற்றது. அவர்கள் அனைவரையும் சென்னையில் நடக்கும் துப்பாக்கிச் சுடும்போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றவர்களாகத் தேர்ந்தெடுத்துள்ளோம்.
தற்போது சென்னையில் தேசிய துப்பாக்கி சுடும் போட்டி செப்டம்பர் மாதம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் மேற்குவங்காள வீரர்கள் கலந்து கொள்வார்கள். இப்போட்டிகள் மூன்று பிரிவுகளாக நடக்கும். சிறு கைத்துப்பாக்கி, துப்பாக்கிபோன்ற துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் எங்கள் வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்றார் கல்யாண் பானர்ஜி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications