For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலகத்துடன் சேர்ந்து உள்ளமும் சுருங்கியது ஏன்?

By Staff
Google Oneindia Tamil News

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறில் உலக சமுதாய சேவா சங்கத்தின் சார்பில், உலக சமாதான விழா நடந்துவருகிறது.

இந்த விழா மூன்று நாட்கள் நடக்கிறது. கோவை மாவட்டம், ஆழியாறில் உள்ள அறிவுத் திருக்கோயிலில், உலகசமாதன விழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

இதற்கான துவக்க விழா இன்று (ஆகஸ்ட் 12) துவங்கியது. விழாவில், அறிவுத் திருக்கோயில் நிறுவனர் வேதாத்திரிமகரிஷி, உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் மயிலானந்தன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில், பேரூர் ஆதினம் இளையபட்டம் மருதாச்சல அடிகள் பேசியதாவது:

எல்லா மகான்களும் உலகத்தில் அமைதியை வலியுறுத்தியுள்ளனர். தனி மனித அமைதியை வலியுறுத்தியுள்ளனர்.வேதாத்திரி மகரிஷி இதனை அறிவியல் பூர்வமான உணர்த்தியுள்ளார்.

எல்லோரும் இறந்த பிறகு பெறும் புகழை வேதாத்திரி மகரிஷி இப்போதே பெற்று விட்டார். அமைதியான உலகைஉருவாக்க வேதாத்திரி மகரிஷி பாடுபட்டு வருகிறார்.

உலகில் அறிவியல் வளர்ச்சி பெற்றுள்ளது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகம் சுருங்கி விட்டது. உலகம்சுருங்கி விட்டதைப் போலவே, மனிதர்களின் உள்ளமும் சுருங்கி விட்டது.

இந்த மனச் சுருக்கத்தையும், இறுக்கத்தையும் போக்கினால், உலகம் சமாதானம் அடையும். இதற்கான அடிப்படைப்பயிற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

உலக அமைதியை நலைநாட்ட ஆண்டிற்கு இரண்டு முறை உலக சமாதான வேள்வி நடத்த வேண்டும்.

பேரூர் அருகே உள்ள நொய்யல் நதி மிகவும் புனிதமான நதி என்று அனைவராலும் புகழப்பட்டுள்ளது. இந்த நதிபுராணங்களில் சிறப்பு மிக்கதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இன்று இது மாசுபட்டுள்ளது என்றும், இதனைப் பயன்படுத்தக் கூடாது என்றும் மாசுக் கட்டுப்பாட்டுவாரியம் கூறியுள்ளது. இதே போன்று தான் மனிதர்களின் மனம் மாசுபட்டு விட்டது.

இதனை சரி செய்ய அறியல்பூர்வமான ஆன்மீகம் தேவை. இதனை வேதாத்திரி மகரிஷி வழங்கி வருகிறார்.இவ்வாறு மருதாச்சல அடிகள் பேசினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X