தமிழ்நாடு விடுதலைப் படை தீவிரவாதி போலீசில் சரண்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

தமிழ்நாடு விடுதலைப் படை அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர், தாளவாடிபோலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமெனில் தமிழக சிறைகளில் உள்ளதமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த 5 தீவிரவாதிகளை விடவிக்க வேண்டும் எனவீரப்பன் நிபந்தனை விதித்துள்ளார்.

இதையடுத்து அவர்களை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந் நிலையில் சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்ததீவிரவாதி ஒருவர் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்துள்ளார். ஆனந்தன் (20) என்றஅந்த இளைஞர், தாளவாடி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

இந்த காவல் நிலைய எல்லைப் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து தான்ராஜ்குமார் கடத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு விடுதலைப்படை, வீரப்பனுடன் இணைந்து செயல்படுவதை ஆனந்தன்எதிர்த்துள்ளார். வீரப்பனின் நடவடிக்கைக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால்இயக்கத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சரணடைந்தார்.

இந்த இயக்கத்தின் கோரிக்கைகளுக்கும், ராஜ்குமார் கடத்தலில் வீரப்பன் விடுத்தநிபந்தனைகளுக்கும் இருந்த ஒற்றுமையின் மூலமும், வீரப்பனின் கோரிக்கைகள்மூலமும் வீரப்பனுக்குத் தீவிரவாத இயக்கங்களுடன் இருந்த தொடர்புவெளிச்சமானது.

தற்போது, தீவிரவாதக் குழுவில் இருந்த ஒருவர் சரணடைந்ததன் மூலம் தொடர்பு உறுதிசெய்யப்பட்டு விட்டது.

போலீசார் ஆனந்தனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+