5 தீவிரவாதிகளை விடுவிப்பது குறித்து அதிகாரிகளுடன் கருணாநிதி ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வீரப்பனின் கோரிக்கைப்படி தமிழ்நாட்டில் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 5 தீவிரவாதிகளை விடுவிப்பது குறித்து தமிழக முதல்வர் கருணாநிதிவெள்ளிக்கிழமை உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஜூலை 30 ம் தேதி வீரப்பனும், அவனது கூட்டாளிகளும், ராஜ்குமார் மற்றும் அவரது உறவினர்கள் மூன்று பேரைக் கடத்திச் சென்றனர்.

இதையடுத்து, ராஜ்குமார் பத்திரமாக விடுவிக்கப்பட வேண்டுமெனில் சில நிபந்தனைகளை இரண்டு மாநில அரசுகளும் நிறைவேற்ற வேண்டும் என்றான்வீரப்பன்.

தமிழ்நாட்டில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய விடுதலைப் படை, தமிழ் விடுதலைப் படையைச் சேர்ந்த 5 தீவிரவாதிகளை விடுவிக்கவேண்டும் என்பது வீரப்பனின் கோரிக்கைளில் ஒன்றாகும்.

அக்கோரிக்கைப்படி, 5 தீவிரவாதிகளை விடுவிப்பது குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் ஏ.பி.முத்துசாமி, உள்துறை செயலாளர் சாந்த ஷீலா நாயர், போலீஸ் டைரக்டர் ஜெனரல் எஃப்.சி.சர்மா,கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் அலெக்சாண்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தீவிரவாதிகளை விடுவிப்பது அவர்கள் விவாதித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+