லைட்மேன்களிடமிருந்து பாதுகாப்பு கேட்கும் டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்
சென்னை:
லைட்மேன்கள் மிரட்டலில் இருந்து எங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்று கோரி ராதிகா உள்ளிட்டடிவி தொடர் தயாரிப்பாளர்கள், சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் காளிமுத்துவிடம் மனு கொடுத்தனர்.
எழும்பூரில் உள்ள காளிமுத்துவின் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த டிவி தொடர் தயாரிப்பாளர்கள்ராதிகா, மாணிக்கம் நாராயணன், தமிழ் மணி ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில்,
லைட் பாய்களுக்கு வழங்கப்படும் தினசரி பேட்டாவை சினிமா படத் தயாரிப்பாளர்கள் இரு மடங்காகஉயர்த்தியுள்ளனர். அதே போன்று எங்களது பேட்டாவையும் உயர்த்தவேண்டும் என்று டிவி தொடர்களில்பணிபுரியும் லைட்பாய்கள் கோரி வருகின்றனர்.
சினிமா படம் என்பது லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்து எடுக்கப்படுகிறது. ஆனால், டிவிதொடர்கள் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை முதலீடு செய்து எடுக்கப்படுகிறது.
ஆகவே, லைட் பாய்களுக்கான பேட்டாவை உயர்த்த முடியாத நிலை உள்ளது.
ஆனால், பேட்டாவை உயர்த்த வேண்டும் என்று கோரி டிவி தொடர்களில் பணிபுரியும் லைட் மேன்கள்படப்பிடிப்புக்குத் தொடர்ந்து இடையூறு செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக நாங்கள் உயர் நீதிமன்றத்துக்குச் சென்று படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்றுதடை வாங்கியுள்ளோம்.
இது குறித்து லைட்மேன்களுடன் பேச்சு நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். இனி மேல் படப்பிடிப்புக்குஇடையூறு ஏற்படுத்தக்கூடாது என்று லைட் மேன்களிடமிருந்து உறுதி மொழி வாங்கி, எங்களது படப்பிடிப்புக்குபாதுகாப்பு தரும்படி கமிஷனர் காளிமுத்துவிடம் மனு கொடுத்துள்ளோம் என்றனர் அவர்கள்.












Click it and Unblock the Notifications