மனைவி, மகளைக் கொன்ற கைதி, காவல் நிலையத்தில் தற்கொலை
சென்னை:
மனைவி, மகளைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கைதி, போலீஸ்நிலைய கழிவறைக்குள் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி கூறப்படுவதாவது:
சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்தவர் கபாலி. தச்சுத் தொழில் செய்து வந்தார். வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில்வசித்து வந்த இவருக்கு நிறைய கடன் இருந்தது. நாளுக்கு நாள் கடன் தொல்லை அதிகமாகியது.
இவருக்கு மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் இருந்தனர். கடன் தொல்லை காரணமாக குடும்பத்துடன்தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார் கபாலி. அதற்காக பிராந்தி, விஷம் வாங்கிக் கொண்டு வீட்டுக்குவந்தார்.
அங்கு பிராந்தியில் விஷம் கலந்து மனைவிக்கும், ஒரு மகளுக்கும் கொடுத்தார். இதைப் பார்த்த மற்றொரு மகள்ஓடிவிட்டார். தானும் விஷம் குடிக்க எண்ணிய கபாலியின் மனம் மாறியது. அதனால், அவர் விஷம் குடிக்கவில்லை.
விஷம் கலந்த பிராந்தி குடித்த நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட கபாலியின் மனைவி, மகள்இருவரும் இறந்தனர். இச் சம்பவத்தை அடுத்து கபாலி கைது செய்யப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால், ராயப்பேட்டைமருத்துவமனையில் உள்ள போலீஸ் நிலையத்தில் கைதிகள் அறையில் அடைக்கப்பட்டு கபாலிக்குச் சிகிச்சைஅளிக்கப்பட்டது.
இந் நிலையில், வெள்ளிக்கிழமை காலை மருத்துவமனையில் உள்ள கழிவறைக்குச் சென்ற கபாலி, அங்குவேட்டியால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ராயப்பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!